குருப்பெயர்ச்சி 2025: புத்தாண்டு பிறப்பதற்கு இன்னும் 25 நாட்களே உள்ளன. குரு பகவான் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மிதுன ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். குருப்பெயர்ச்சியால் இந்தப் புத்தாண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்காலம்... (Lucky Zodiac Signs 2025 Jupiter Transit)
2025 புத்தாண்டு விரைவில் பிறக்கவுள்ளது. இந்த ஆண்டின் சிறப்பாக புத்தாண்டின் தொடக்கத்திலேயே குரு பகவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். சனி கிரகத்தைவிட குரு பகவான் மெதுவாக பயணிப்பார் என்பதால் மிதுன ராசியில் 13 மாதங்கள் சஞ்சாரம் செய்யவுள்ளார். குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாவார். (GuruPeyarchi 2025)
ஞானக்காரகன், கல்விக்காரகன், தானக்காரகன், வேலைக்காரகன், செல்வக்காரகனான குரு பகவவான் மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால், சில ராசிகளுக்கு ஏகபோகமான நற்பலன்களை அள்ளித் தரப்போகிறார் குருபகவான். அந்த வகையில், இந்த ஆண்டு எந்நெந்த ராசிக்காரர்களுக்கு குரு பகவான் என்னென்ன நற்பலன்களை கொடுக்கப் போகிறார் என்று தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிக ராசி: 2025 ஆம் ஆண்டு குருப்பெயர்ச்சியில் விருச்சிக ராசிக்கு ஏழாவது இடத்தில் குரு பகவான் பயணிக்கிறார். பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கணவன், மனைவியிடையே மகிழ்ச்சி பெருகும். திருமண வாழ்க்கையில் அனுகூலம் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும்.
நீண்ட நாட்களாக திருமணம் ஆகவில்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு எல்லாம் இந்த ஆண்டு திருமணம் நடப்பதற்கான அற்புதமான காலமாக உள்ளது. உங்களுடைய மனைவியுடன் சேர்ந்து ஏதேனும் புதிய தொழில்களையோ, திட்டங்களையோ தொடங்கினால் அதில் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு அதிகரிக்கும்.. நல்ல வருமானம் உண்டாகும்.
ரிஷப ராசி: குருப்பெயர்ச்சியால் ரிஷப ராசிக்கு இந்த ஆண்டு அற்புதமான ஆண்டாக அமையப் போகிறது. உங்களது ராசிக்கு வருமான ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்கிறார். பணம் கொட்டோ கொட்டோனு கொட்டப் போகிறது. வேலைக்குச் செல்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரம் சீராகும். நிதிப் பற்றாக்குறை நீங்கும். நீங்கள் எடுத்த காரியங்கள் நிறைவேறும்.
கடன்கள் அனைத்தும் தீரும். வாங்க வேண்டும் என்று நினைத்த பொருள்களை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். புதிய வேலைகளில் அனுகூலம் உண்டாகும்.
கும்ப ராசி: கும்ப ராசியினருக்கு குரு பகவான் அள்ளித் தரப்போகிறார். நிலுவையில் இருந்து அனைத்துப் பணிகளும் நிறைவேறும். முதலீடுகளை செய்வீர்கள். அதில் நல்ல வருமானத்தையும் காண்பீர்கள். நிதி சார்ந்த அனைத்து விஷயங்களிலும் லாபம் கிடைக்கும். போட்டித் தேர்வுகள் எழுதும் மாணவர்களுக்கு சிறந்த ஆண்டாக அமையும்.
மீன ராசி: மீன ராசியினருக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமையப் போகிறது. குரு பகவான் மீன ராசியில் இருந்து நான்காவது இடத்தில் பயணம் செய்வதால் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளித் தரப் போகிறார். சமூகத்தில் அந்தஸ்து உண்டாகும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனங்களில் பெரிய வாய்ப்புகள் வந்து சேரும். நிலம், வீடு என சொத்துகள் வாங்கும் திறன், வாகன வசதிகள் அதிகரிக்கும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage