சென்னை: கணவன் மனைவி இடையிலான விவாகரத்து வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ; இந்தியாவில் தற்போது விவாகரத்து வழக்குகள்.. அந்த வழக்கில் கேட்கப்படும் ஜீவனாம்சங்கள் போன்ற விவகாரங்கள் கவனம் பெற்று வருகிறது. இந்த நிலையில் திருமணமான வெறும் ஒரு மாதத்திற்குப் பிறகு, ஒரு பெண் தனது கணவரிடம் 40 லட்ச ரூபாய் ஜீவனாம்சமாக கோரி உள்ளார்.
திருமணம் ஆகி வெறும் ஒரு மாதத்தில் 40 லட்சம் ரூபாய் கேட்டு அந்த பெண் தாக்கல் செய்த மனு தற்போது வைரலாகி உள்ளது. மனைவிகள் கேட்கும் ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்க உச்ச நீதிமன்றம் 8 அம்ச பார்முலாவை வகுத்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், சமீபத்தில் இந்து தம்பதிகள் சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்கில் இறுதி ஜீவனாம்சத் தொகையை தீர்மானிப்பதற்கான வழிகாட்டுதல்களை வகுத்தது.
ஜீவனாம்சம் குறித்து முடிவெடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 காரணிகளை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது:
இந்த நிலையில்தான் அந்த பெண்ணின் மனு கவனம் பெற்று வருகிறது. இந்த வழக்கில் கணவர் சார்பாக வைக்கப்பட்ட வாதத்தில், நாங்கள் திருமணம் செய்தே ஒரு மாதம்தான் ஆகிறது. அதற்குள் அவர் விவாகரத்து கேட்கிறார். நாங்கள் சேர்ந்து ஒன்றாக கூட வாழவில்லை. இதில் பெரும்பாலான நாட்கள் அவர் தனது அம்மா வீட்டில்தான் இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் எனது மனைவிக்கு ரூ. 30 லட்சத்திற்கு மேல் கொடுக்க முடியாது.
நாங்கள் ரூ.30 லட்சம் தர தயாராக உள்ளோம் , ஆனால் ரூ.40 லட்சம் தர வேண்டும் என்று வற்புறுத்துகிறார். மனைவி சார்பில் வெறுமனே அதை வாங்க முடியாது என்று வாதம் வைத்தார்.
இதற்கு இரண்டு பெஞ்ச் நீதிபதி.. சமரச பேசப்பட்டதா என்ற கேள்வி எழுப்பினர். அதற்கு 15 லட்சம் வரை கொடுக்க கணவர் சார்பாக பேசப்பட்டது. அதன்பின் 30 லட்சம் ரூபாய் வரை தர கணவர் ஒப்புக்கொண்டார். ஆனால் மனைவி 40 லட்சம் ரூபாயில் இருந்து இறங்கி வரவே இல்லை. என்று கணவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கூறினார். இதற்கு நீதிபதிகள் மனைவி தரப்பு இறங்கி வரவே முடியாது என்று கூறினால்.. என்ன அர்த்தம்.. கணவர் தரப்பு இறங்கி வரும் போது.. மனைவி தரப்பு இறங்கி வர வேண்டுமே.. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தார்.