அடேங்கப்பா.. 10 தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம்.. ஒரே லாட்டரியில் 6,500 கோடி ரூபாயை அள்ளிய நபர்!

post-img
லண்டன்: லாட்டரியில் சில கோடிகளை வென்றாலே போதும் என பலரும் நினைப்பார்கள். ஆனால், பிரிட்டனை சேர்ந்த ஒருவருக்கு கனவில் கூட நினைத்து பார்க்காத தொகை லாட்டரியில் வென்று இருக்கிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ 6,500 கோடியை அவர் பரிசாக வென்றுள்ளார். ஒரு தலைமுறை என்ன, 10 தலைமுறைக்கு உட்கார்ந்த இடத்தில் இருந்தே சாப்பிடலாம் போல.. இது குறித்த விவரங்களை பார்க்கலாம். சூர்ய வம்சம் படத்தில் வருகிற மாதிரி ஒரே பாட்டில் பணக்காரர் ஆகிவிட முடியுமா என பலரும் பகல் கனவு காண்பதை பார்க்க முடியும். ஆனால் இதையெல்லாம் படத்தில் தான் பார்க்க முடியும்.. நிஜத்தில் பார்க்க முடியாது எனவும் நினைப்பதுண்டு. அதேவேளையில் இப்படி ஓவர் நைட்டில் ஓபாமா ஆவது எல்லாம் லாட்டரியில் பணம் அடித்தால்தான் எனவும் நினைப்பார்கள்.. ஆனால், ஒரு சிலரின் வாழ்க்கையில் தலைவிதியே லாட்டரி மாற்றிவிடும் கதைகள் கூட அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கத்தான் செய்கிறது. அப்படியாக பிரிட்டனை சேர்ந்த ஒருவரின் வாழ்க்கைதான் மொத்தமாக மாறியிருக்கிறது. அதுவும் ஒரு கோடி இரண்டு கோடி இல்லை. மொத்தமாக 6,500 கோடி பம்பர் பரிசாக லாட்டரியில் வென்று இருக்கிறார். இதனால் அவர் சந்தோஷத்தின் எல்லைக்கே சென்றுவிட்டார். ஒரே லாட்டரியில் பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு பல ஆயிரம் கோடி பரிசை வென்று பலரையும் பொறாமை பட வைத்து இருக்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த அந்த அதிர்ஷ்டக்கார நபர். இவருக்க்கு அதிர்ஷ்ட மழை கொட்டியுள்ளது. பிரிட்டன் வரலாற்றிலேயே மூன்றாவது பெரிய தொகை இதுதானாம்.. இந்த பணத்தை வென்ற அதிர்ஷ்டசாலியின் விவரம் வெளியாகவில்லை. அதேவேளையில், நேஷனல் லாட்டரியில் இந்த தொகையை வென்று இருக்கிறார். பிரிட்டனில் பல பெரும் கோடீஸ்வர்களை விட இவரிடம் உள்ள பண மதிப்பு ஒரே நாளில் அதிகரித்துவிட்டதால், மூக்கின் மேல் விரலை வைத்து பலரும் பொறாமையுடன் பார்த்து வருகிறார்களாம். நெட்டிசன்கள் இது தொடர்பாக தங்களுக்கே உரிய பாணியில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். நெட்டிசன்கள் இது குறித்து கூறுகையில், "அதிர்ஷ்டம் மீது எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லாமல் இருந்தது.. இவருக்கு அடித்து இருக்கும் பணத்தொகையை பார்க்கும் போது உண்மையில் அதிர்ஷ்டம் எல்லாம் இருக்கிறதுதான் போல" என்று நெட்டிசன் ஒருவர் கூறியிருக்கிறார். அதேபோல மற்றொரு நெட்டிசன் கூறுகையில், "கனவில் கூட இப்படி எல்லாம் யாரும் நினைத்து பார்க்க மாட்டார்கள்.. உண்மையில் பரிசு வென்ற நபர் பணத்தை எப்படி செலவிடுவது என்று யோசிப்பதற்கே பல நாட்கள் ஆகும் என ஜாலியாக கமெண்ட் அடித்து இருக்கிறார். கடந்த மாதம் 26 ஆம் தேதி நடைபெற்ற குலுக்கலில் தான் இவ்வளவு பெரிய தொகையை வென்று இருக்கிறார். யூரோ மதிப்பில் £177,033,699.20 - அவருக்கு பரிசாக கிடைத்து இருக்கிறது. இவ்வளவு தொகை வென்று இருப்பதன் மூலம் பிரிட்டன் பாடகி டுயா லிபாவை மற்றும் மைக்கேல் புப்லுவை விட பணக்காரர் ஆகியிருக்கிறார் பெயர் கூறாத அந்த அதிர்ஷ்டசாலி. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக இந்த தொகையை வென்று இருக்கும் அந்த நபர் பண்டிகையை வேற லெவலில் கொண்டாட பிளான் போட்டு இருப்பார் என லாட்டரி அதிகாரிகளே கூறி வருகிறார்கள். பிரிட்டன் லாட்டரியில் இவ்வளவு பெரிய தொகை வெல்வது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 195 மில்லியன் யூரோ ஜாக்பாட் வென்றார். இதுவே பிரிட்டனில் தனி நபர் ஒருவர் வென்ற இவ்வளவு தொகையாகும். அதேபோல, கடந்த 2022- ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி ஜோ மற்றும் ஜெஸ் த்வைட் ஆகியோர் யூரோ 184 மில்லியன் யூரோ வென்று இருந்தார். இதற்கு பிறகு இவ்வளவு பெரிய தொகை இந்த ஆண்டு அடித்துள்ளது.

Related Post