லக்னோ: தாலி கட்டிய சிறிது நேரத்தில் மணமகனை கூப்பிட்டு தனக்கு பர்ஸ்ட் நைட்டில் கஞ்சாவும் மட்டன் கறியும் வாங்கி தர முடியுமா என மனைவி கேட்ட வினோத சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. மனைவி சொன்னதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளை அடுத்து என்ன செய்தார் என்பது பற்றிய விவரங்களை இங்கே பார்க்க்லாம்.
இப்படியும் கூட நடக்குமா என யோசிக்கும் அளவுக்கு, சில நேரங்களில் திருமண வீடுகளில் சில விசித்திர சம்பவங்கள் நடைபெறுகிறது. சில நேரங்களில் வேடிக்கையாகவும் சில நேரங்களில் வேதனைப்படும் வகையிலும் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன. மணமேடைக்கே மாப்பிள்ளையில் போதையில் வருவது.. திடீரென தாலி கட்டும் நேரத்தில் எஸ்கேப் ஆவது என சில விசித்திர சம்பவங்கள் அவ்வப்போது எங்காவது ஒரு இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அப்படியான ஒரு சம்பவம் தான் உத்தர பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. ஆனால் இந்த முறை ஒரு படி மேலே போய் மணப்பெண் மாப்பிள்ளையிடம் பீர் மற்றும் கஞ்சா கேட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
உத்தர பிரதேசம் ஷரன்பூர் மாவட்டத்தில் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. இரு மனங்கள் இணையும் திருமணவிழாவில் மணக்களை வாழ்த்த இரு வீட்டை சேர்ந்த உறவினர்களும் வந்தனர். திருமணம் நல்ல படியாய் முடிந்து விருந்து உபசரிப்பும் நடந்து முடிந்துள்ளது. திருமணம் முடிந்த நாளன்று மாப்பிள்ளை வீட்டில் முதலிரவு நடைபெற இருந்துள்ளது. முதலிரவுக்கான ஏற்பாடுகளை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், மாப்பிள்ளையை தனியாக அழைத்த மனைவி, முதலிரவில் தனக்கு பீரும், மட்டன் கறியும் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். மனைவி முதல் முறையாக கேட்கிறாரே என நினைத்த மாப்பிள்ளையும் பீர் வாங்க சென்றுள்ளார். அப்போது, திடீரென கூப்பிட்ட மணப்பெண், எனக்கு பீர் வேண்டாம்.. கஞ்சா வாங்கி தாங்க என்று கேட்டு இருக்கிறார். மணப்பெண் இப்படி சொன்னதும் மாப்பிள்ளைக்கு ஒரு நொடி தலையே சுற்றிப்போயுள்ளது.
மணப்பெண் சொன்ன வார்த்தை மாப்பிள்ளைக்கு பேரிடியாக அமைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் இதற்கு மேல் பொறுக்க முடியாது எனக் கருதி, தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியிருக்கிறார். இதைக்கேட்ட மாப்பிள்ளை வீட்டினர் கோபத்தின் உச்சிக்கே என்று பெண் வீட்டாரிடம், “என்னங்க இது.. ஒரு பெண் கஞ்சாவா கேட்பார்” என்று இது பற்றி கேட்டு இருக்கிறார்கள்.
இதில் இரு வீட்டாரும் மாறி மாறி பேசி வாக்குவாதம் உண்டானது. பிரச்சினை முற்றவே, காவல் நிலையத்திற்கு பஞ்சாயத்து சென்றுள்ளது. அப்போது மணப்பெண் வேடிக்கையாகவே கஞ்சா வேண்டும் என்று கேட்டுள்ளார். இதை சீரியசாக எடுத்துக்கொண்ட மாப்பிள்ளை, பயந்து போய் வீட்டில் சொல்லிவிட்டார் என பெண் வீட்டினர் கூறியுள்ளனர்.
இதை மாப்பிள்ளை வீட்டினர் ஏற்கவில்லை. இரு வீட்டினரும் புகார் அளிக்க விரும்பாததால், பிரச்சினையை வீட்டில் வைத்து தீர்த்துக் கொள்ளுங்கள் என போலீசாரும் அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தனர். உத்தர பிரதேசத்தில் நடைபெற்று இருக்கக் கூடிய இந்த விசித்திர சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.