சென்னை: தனது மனைவி பொறுமையை இழந்து பலமுறை சாதி விதிகளை மீறியதற்காக அபராதம் கட்டி இருக்கிறார் என்ற உண்மையை நடிகர் சாந்தனு போட்டு உடைத்திருக்கிறார்.
தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் முதலில் ட்விட்டர் வந்த போது அதில் பரபரப்பாக இருந்தனர். அதன்பின்னர் இன்ஸ்டாகிராம் வந்த பிறகு அதில் அதிகர் ஆர்வம் காட்டினர். இப்போது சினிமா பிரபலங்கள் இடையே யூடியூப் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. அவர் தங்களுக்கு என்று தனியான சேனல் நடத்தி வருகின்றன. அதில் தனது வாழ்க்கை அனுபவங்கள், சமையல் விசயங்கள் எனப் பலவறையும் பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வரிசையில் சாந்தனு பாக்யராஜும் அவரது மனைவி கீர்த்தியும் ஒரு சேனல் நடத்தி வருகின்றனர். அதில் மனம் விட்டுப் பல விசயங்களை அவர்கள் பேசி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இந்த ஜோடி சமீபத்தில் வெளியிட்ட விசயத்தில் காதல் விசயத்தில் என்ன மாதிரி பொறுமையாக இருக்க வேண்டும் என்பது பற்றிய தகவகல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
வீடியோவில் பேசிய சாந்தனு, காதல் விசயத்தில் பொறுமையாக முடிவு எடுக்க வேண்டும் என்றும் வாழ்க்கைத் துணையாக வருபவர்களுடன் தனது வாழ்நாள் முழுவதும் சேர்ந்து பயணிக்க இருப்பதால் அதில் அவசரம் காட்டக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக வாழ்க்கைக்குப் பொறுமை என்பது எந்தளவுக்கு முக்கியம் என்பதை விவாதித்து வீடியோ பதிவிட்டுள்ள இந்த ஜோடி தனது சொந்த வாழ்க்கையில் எப்படி பொறுமையை இழந்து கஷ்டங்களை அனுபவித்தோம் எனப் பேசி உள்ளனர்.
இந்தப் பதிவில் தனது மனைவி கீர்த்தி மீது சில புகார்களை சாந்தனு வைத்துள்ளார். அன்பாக அவருக்கு சில அறிவுரைகளைக் கொடுத்துள்ளார். அவர் பேசுகையில், “அண்ணாநகர் சிக்னல் இருந்து 'உங்கள் வண்டி சாலை விதிமுறைகளை மீறிவிட்டது’ என்று அடிக்கடி கீர்த்தியின் அப்பாவுக்கு மெசேஜ் போகும். அப்படி ரூல்ஸை மீறி வண்டி ஓட்டி அதிக முறை மாட்டியது கீர்த்திதான். அந்தளவுக்குப் பொறுமை இல்லாதவர் கீர்த்தி. அதை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். முதலில் கீர்த்திக்கு டிரைவிங் லைசன்ஸ் கொடுத்த அதிகாரி யார் என நானே தேடிக்கிட்டு இருக்கிறேன். அந்தளவு ரூல்ஸ் மீறி அபராதம் கட்டி இருக்கிறார்.
ஆனால், நான் அதற்கு நேர்மாறாக ஆள். சாலைகளில் எப்போது பொறுமையாகத்தான் வண்டி ஓட்டுவேன். சாலை விதிமுறைகளை கவனித்துத்தான் வண்டியை எடுப்பேன். நாம ஒரு சின்னதாக தப்பு செய்தால்கூட, அதனால் பலருக்கு ஆபத்து வரும். அந்தப் பொறுப்பு நமக்கு இருக்கவேண்டும்” என்று பேசி இருக்கிறார் சாந்தனு.
இவர் சொந்த வாழ்க்கையில் பொறுமையை இழந்ததால் பல கஷ்டங்களை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். இப்போதுவரை சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கப் போராடி வருவதாகவும் அவர் ஆதங்கப்பட்டுப் பேசி இருக்கிறார். பல இடங்களில் பொறுமையாக இருந்தாலும் உடற்பயிற்சி செய்யும் போது ஒரு நிதானம் இல்லாமல் மிகக் கடுமையாக மேற்கொண்டு பயிற்சிகளால் இரண்டு முறை தனக்குக் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை எடுக்கும் அளவுக்குச் சென்றதாகவும் பேசியுள்ளார் சாந்தனு.
இந்த கரடுமுரடான உடற்பயிற்சியால் அவரது உடலில் உள்ள டிஸ்க் ஒன்று நிரந்தரமாக விலகிவிட்டது. அதனால் நிரந்தரமாக அவரால் அதிக எடை கொண்ட பொருட்களை எடுக்க முடியால் சென்றுள்ளது. ஆகவேதான் கிரிக்கெட் ஆடுவதும் கைவிட்டுப் போய்விட்டது எனக் கவலையைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.