நேற்று முதல்நாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது.
மொத்தமாக 17 மணி நேரம் சோதனை நடந்தது. சோதனையை தொடர்ந்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டது.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுக்க அமலாக்கத்துறை தீவிரமாக முயன்று வருகிறது. செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவமனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிமன்ற காவலில் வைப்பதற்கான உத்தரவை ரத்து செய்வது தொடர்பான மனு, ஜாமீன் மனு உடனே நீதிமன்ற அறையில் விசாரிக்கப்பட்டது.
சிகிச்சை அறையிலேயே நடந்த விசாரணையில், செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது. ஆனால் செந்தில் பாலாஜி சட்ட விதிகளுக்கு எதிராக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டாரா தெரியவில்லை. அதேபோல் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்றும் தெரியவில்லை என்று செந்தில் பாலாஜி வழக்கறிஞர் இளங்கோவன் வாதம் வைத்துள்ளார்.
வாதங்களை கேட்ட பின், செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்தார் சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி. மருத்துவமனையிலேயே நடந்த விசாரணையில் அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. செந்தில் பாலாஜி கஸ்டடி எடுக்கப்பட்டு உள்ளதால் உடனே செந்தில் பாலாஜி தரப்பு சார்பாக ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அமலாக்கத்துறை வாதம்: இந்த வழக்கில், அமலாக்கத்துறை வைத்த வாதத்தில் பின்வரும் பாயிண்டுகளை சொன்னது.
- அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கான மெமோவை வாங்க மறுத்தார்.ரிமாண்ட்டை நீக்க கோரிக்கை வைக்க முடியாது, ஜாமீன்தான் கேட்க முடியும்.
- கைது செய்யப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே மெமோவை வாங்க செந்தில் பாலாஜி மறுத்துவிட்டார்.
- செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளன. கைது குறித்து, செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது.
- சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் குற்ற விசாரணை முறைச் சட்ட விதிகள் பொருந்தாது.
- செந்தில் பாலாஜிக்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கின்றனர். அதற்கான அவசியம் இல்லை என்று நாங்கள் கூறுகிறோம்.
- செந்தில் பாலாஜி உடல்நிலையை கண்காணிக்க சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
- செந்தில் பாலாஜியை மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற கூடாது என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது.
- செந்தில் பாலாஜி நேற்று முதல்நாள் வரை ஆரோக்கியமாக இருந்த போது எப்படி உடல்நிலை மோசமாகும், என்று அமலாக்கத்துறை வாதம் வைத்தது.