மோடியின் விஸ்வகர்மா திட்டம் ஒப்புதல்.. வெறும் 5% வட்டியில் கடன்.. யாருக்கெல்லாம்!

post-img

இப்புதிய PM Vishwakarma திட்டத்திற்கு மத்திய துறை ஒப்புதல் அளித்ததுள்ள நிலையில், விரைவில் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்து பல லட்சம் பேர் குறைவான வட்டியில் கடன் பெற உள்ளனர்.

ஆகஸ்ட் 15 செவ்வாய்க்கிழமை சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவிக்கப்பட்ட பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் சுமார் 30 லட்சம் கைவினைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்aசர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 2

028 வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கு பிரதான் மந்திரி விஸ்வகர்மா திட்டத்திற்கு மத்திய அரசு சுமார் 13,000 கோடி ரூபாய் நிதி ஒத்துக்கீடு செய்துள்ளது. இந்தத் திட்டம் வாயிலாக முதல்கட்டமாக 18 பாரம்பரிய வர்த்தகங்களை செய்யும் மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படும்.

 பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், கைவினைஞர்கள் PM விஸ்வகர்மா சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு சுமார் 1 லட்சம் ரூபாய் வரை கடன் உதவி (முதல் தவணையாக) மற்றும் 2 லட்சம் ரூபாய் (இரண்டாவது தவணையாக) வரையிலான தொகையை குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்பட உள்ளது.

முதல் தவணையாக 1 லட்சம் ரூபாய்க்கும், 2வது தவணையாக 2 லட்சம் ரூபாய்க்கும் வெறும் 5% வட்டியில் கடன் அளிக்கப்பட உள்ளது. இதன் வங்கிகளில் அளிக்கப்படும் அனைத்து விதமான ரீடைல் கடன்களை காட்டிலும் இது மிகவும் குறைவானது.

பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டம் வாயிலாக நிதி உதவி மட்டும் அல்லாமல் திறன் மேம்பாடு, கருவித்தொகுப்புக்கான ஊக்குவிப்பு தொகை, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் மார்கெட்டிங் ஆதரவுகளை வழங்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  

பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் முதற்கட்டமாக

  • தச்சர்கள்,
  • படகு தயாரிப்பாளர்கள்
  • கொல்லர்கள்,
  • பூட்டுக்காரர்கள்
  • பொற்கொல்லர்கள்
  • குயவர்கள்
  • சிற்பிகள்
  • செருப்புத் தொழிலாளிகள் மற்றும் கொத்தனார்கள்

என சுமார் 18 பிரிவினருக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும். இத்திட்டம் மூலம் பலன் பெறும் 18 பிரிவுனர்கள்தச்சர் (சுதர்)

படகு தயாரிப்பாளர்

பாதுகாப்பு கவசம் செய்பவர்

கொல்லன்

சுத்தியல் மற்றும் கருவி செய்பவர்கள் மேக்கர் மேசன் (கட்டிட பணி செய்பவர்கள்)

கூடை / பாய்/ துடைப்பம் தயாரிப்பவர்/காயர் நெசவாளர்

பொம்மை தயாரிப்பாளர் (பாரம்பரிய பொம்பை)

முடி திருத்துபவர்

பூமாலை கட்டுபவர்

பூட்டு தொழிலாளி

தங்க நகை செய்பவர்

துணி துவைப்பவர்

குயவர்

தையல்காரர் (டார்சி)

மீன்பிடி வலை தயாரிப்பாளர்

சிற்பி

கல் உடைப்பவர்

செருப்பு தைப்பவர்.


Related Post