சென்னை: வீடு, நிலம் வாங்க போறீங்களா? சம்பந்தப்பட்ட இடத்தில் வில்லங்கம் உள்ளதா என்று ஆன்லைனிலேயே பார்ப்பது எப்படி தெரியுமா?
பொதுவாக நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் யார் என்பது குறித்தும், அதில் வில்லங்கம் ஏதேனும் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், வில்லங்க சான்றினை பெறுவார்கள்.
வில்லங்கம்: காரணம், சட்டப்படி அந்த இடம் சரியான இடம் தானா? அல்லது, நிலம், வீட்டு மனை, வீடு போன்ற சொத்துகளை வாங்க விரும்புவர்கள் அந்த சொத்தின் முந்தைய ஓனர்கள் இருக்கிறார்களா? அதில் ஏதாவது வில்லங்கம் உள்ளதா? என்பதையெல்லாம் அறிந்து கொள்ளவே, இந்த சான்றிதழை பெறுவார்கள்..
சுருக்கமாக சொல்லப்போனால், அந்த சொத்தின் ஓனர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழே, வில்லங்க சான்றிதழாகும். அத்துடன், அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழாகும்.. அந்த சொத்து யார் யார்? வசம் இருந்து கைமாறி வந்துள்ளது என்பது முதல் எல்லா விவரங்களும் இதில் இடம்பெற்றிருக்கும்.
நில வழிகாட்டி மதிப்பு.. நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்கிறதா? சர்வே எண் குறித்து பதிவுத்துறை அதிரடி
வில்லங்கம்: அந்த சொத்து பதிவுத்துறையில் பத்திரப்பதிவு செய்யப்பட்ட தேதி, பத்திரத்தின் ஆவண எண், உரிமையாளர் பெயர், சொத்தின் வகைப்பாடு, சொத்தின் விஸ்தீர்ணம் (அளவு), சர்வே விவரம் உட்பட பல்வேறு விவரங்களையும் உள்ளடங்கி இருக்கும். இதன் மூலம் ஒரு சொத்து தொடர்பான வில்லங்கத்தினை முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய தினம், அசையா சொத்தின் மீது வங்கி மற்றும் நிதி சேவை நிறுவனங்களில் கடன் பெறவும் வில்லங்க சான்று தேவையாக இருக்கிறது.. முன்பெல்லாம் இந்த வில்லங்க சான்றினை பெறுவதற்காக, பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டி இருந்தது. ஆனால், இப்போது, ஆன்லைன் மூலமாகவே, வில்லங்க சான்றினை பொதுமக்கள் பெற முடியும்..
வில்லங்க சான்றிதழ்: தமிழ்நாடு பதிவுத்துறை சார்பில் வழங்கப்படும் இந்த சான்றினை, இணைய வழியில் எளிய முறையில் விண்ணப்பித்து, பெற்றுக் கொள்ளலாம். இதற்காக எந்தவித லஞ்சமும் புரோக்கர்கள் உட்பட யாருக்குமே தர வேண்டிய அவசியமில்லை. அதேபோல, ஆன்லைனிலேயே வில்லங்கத்தை பார்க்கலாம்.. அதுவும் ஒரு நிமிஷத்தில் பார்க்கலாம்.. இதற்கு கீழ்காணும் முறைகளை பயன்படுத்த வேண்டும்.
- இதற்காக, www.ecview.tnreginet.net என்ற அதிகாரப்பூர்வ இணையத்திற்கு செல்ல வேண்டும்.
- மண்டலம், மாவட்டம், எந்த தேதியிலிருந்து, எந்த தேதி வேண்டும் வரை தேவை என்பன போன்ற ஆப்ஷன்களை எல்லாம் தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்து, சப் ரிஜிஸ்டர் அலுவலகம், உங்கள் ஏரியா அலுவலகம், கிராமம், பத்திரத்தில் உள்ள சர்வே நம்பர் போன்றவற்றை பிழை இல்லாமல் பதிவிட்டு, சர்ச் ஆப்ஷனை கிளிக்செய்தால் போதும். நாம் தேர்வு செய்த இடத்திற்கான வில்லங்கம் PFF வடிவில் கிடைக்கும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage