முன்னாள் கணவர் பற்றி உருக்கமாக பேசிய பாவனி.. கையில் அந்த டாட்டூ இன்னும் இருக்கு.

post-img

சென்னை: நடிகை பாவனி தன்னோடு சீரியலில் ஒன்றாக நடித்த நடிகரை காதலித்து திருமணம் செய்து இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்துவிட்ட பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாவனியை டான்ஸ் மாஸ்டர் அமீர் காதலித்து வந்தார். முதலில் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்த பாவனி பிறகு அமீரை காதலிப்பதை வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் பாவனி மற்றும் அமீர் தாங்கள் புதியதாக வாங்கி இருக்கும் வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். விரைவில் இவர்களுடைய திருமணம் இருக்கும் என்று கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பாவனி தன்னுடைய முதல் கணவர் குறித்து அமீர் முன்பு உருக்கமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி என்ற சீரியலில் நந்தினி ஆக நடித்து பலருடைய மனதை கவர்ந்த நடிகை பாவனி ரெட்டி அதைத் தொடர்ந்து ஒரு சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த பாவனி தன்னுடைய சோக கதையை சொல்லி பலரையும் கண்கலங்க வைத்திருந்தார்.

 

அதில் தான் பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்த தன்னுடைய கணவர் தன்னோடு ஏற்பட்ட சண்டையில் கோபப்பட்டு அறைக்குள் சென்று தற்கொலை செய்து கொண்டார். அதற்கு பிறகு தான் பட்ட வேதனை என்ன என்பதை குறித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசியிருந்தார். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கலந்து கொண்ட அமீர் ஒரு சில நாட்களிலேயே தான் பாவனியை காதலிப்பதாக அந்த நிகழ்ச்சியில் சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆனால் இவர்கள் இருவரும் கண்டண்டுக்காக காதலிப்பதாக நடித்து கொண்டிருக்கிறார்கள் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் வெளியே வந்த பிறகு இவர்களுடைய காதல் நீடித்து வந்தது. அதற்கு பிறகு பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் அமீரோடு டான்ஸ் ஆடிய பாவனி அந்த சீசனில் டைட்டிலையும் வெற்றி பெற்று இருந்தார். இந்த நிலையில் டைட்டில் வெற்றி பெற்றதும் தன்னுடைய காதலை இணையத்தில் அனைவருக்கும் தெரியப்படுத்தி இருந்தார்.

இப்படியான நிலையில் இப்போது அமீர் மற்றும் பாவனி இருவரும் தாங்கள் புதியதாக வாங்கி இருக்கும் வீட்டில் ஒன்றாகத்தான் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு தனியார் சேனலில் இவர்கள் பேட்டி கொடுத்திருக்கின்றனர். அப்போது பாவனி தன்னுடைய முதல் கணவர் குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். நானும் என்னுடைய கணவரும் எத்தனை வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம் என்பது பலருக்கும் தெரியாது.

ஆனால் சிலர் இணையத்தில் அசால்டாக கமெண்ட்களில் என்னுடைய மனதை கிழித்தெடுக்கிறார்கள். நான் என்னுடைய கணவரை கொன்றுவிட்டேன் என்று சொல்கிறார்கள். அதுபோல அமீரை இனி எப்போது கொல்ல போகிறாய் என்று கூட கேட்கிறார்கள். நான் ஒருத்தர் மீது அன்பு வைத்துவிட்டேன் என்றால் அவர்களுக்காக எதையும் செய்யக் கூடியவள். அவர்களுக்காக எதையும் பார்த்து பார்த்து செய்வேன்.

அவர்கள் மட்டும்தான் என்னுடைய உலகம் என்று நான் வாழ்ந்து கொண்டிருப்பேன். ஆனால் அப்படிப்பட்டவர்கள் திடீரென்று என்னுடைய வாழ்க்கையில் இல்லாமல் போய்விட்டால் நான் எவ்வளவு வேதனை பட்டு இருப்பேன் என்பது என்னுடைய வாழ்க்கையில் வாழ்ந்து பார்த்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதை அசால்ட்டாக சிலர் கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தி கமெண்ட் போடுகிறார்கள்.

நீங்கள் ஒரு கமெண்ட் தானே என்று நினைக்கலாம். ஆனால் அந்த கமெண்ட் என்னை எவ்வளவு வேதனைப்படுத்தும் என்பது தெரிகிறதா? என்று கண்கலங்க பேசி இருந்தார். அப்போது அருகில் இருந்த அமீர் எனக்கு பாவனி பற்றி நன்றாகவே தெரியும். அதனால் தான் நான் அவளை நாளுக்கு நாள் அதிகமாக காதலித்துக் கொண்டிருக்கிறேன். பாவனி அவளுடைய முதல் கணவரைப் பற்றி பேசாத நாளே கிடையாது.

 

அவள் அடிக்கடி முதல் கணவரை பற்றி பேசுவாள். அவருடைய நினைவுகளை நினைவுப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறார். அவருடைய பெயரை பாவனியின் கையில் டாட்டூ போட்டு இருக்கிறார். ஆனால் அந்த டாட்டுவை கூட நான் எடுக்கட்டுமா என்று என்னிடம் ஒருமுறை கூட பாவனி கேட்டது கிடையாது. நானும் அதை எடுக்க சொல்ற ஆளும் கிடையாது. அது பாவனியோட வாழ்க்கை அதை மறந்து தான் ஆக வேண்டும் என்று நான் எந்த இடத்திலும் சொல்ல மாட்டேன்.

பாவனி அந்த அளவிற்கு அவரை நேசித்து இருக்கிறார். என்னிடமும் அதிகமாக பாசமாகத்தான் இருக்கிறாள். சில நேரங்களில் என்னிடம் கோபப்படுவாள். அவள் கோபப்பட்டால் நான் போய் தூங்கி விடுவேன். பிறகு கொஞ்ச நேரம் கழித்து அவளா வந்து என்னிடம் சமாதானம் ஆகுவாள் என்று அந்த நிகழ்ச்சியில் அமீரும் பேசி இருக்கிறார்.

Related Post