புத்தாண்டு 2025: இன்னும் சில நாட்களில் 2025 புதிய ஆண்டு பிறக்க உள்ளது. பல கனவுகளுடன் புத்தாண்டை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். 2025 ஆம் ஆண்டு கிரகங்களில் முக்கிய மாற்றம் நிகழப் போகிறது. இது ராசிகளுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்த பதிவில் துலாம், விருச்சிகம், தனுசு ராசிகளுக்கான புத்தாண்டு பலனை பார்க்கலாம்... (Puthandu rasi palan 2025)
துலாம் (Puthandu rasi palan for Thulam): 2025 ஆம் ஆண்டை பொறுத்தவரை 12 ராசிகளில் துலாம் ராசிக்கு நல்ல பலன்களை தரக் கூடிய அமைப்புகள் உள்ளன. ஐந்தாம் இடத்தில் இருக்கும் சனி ஆறாம் இடத்துக்கு பெயர்ச்சியாகவுள்ளது. முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கக் கூடிய இந்த நிகழ்வால் துலாம் நல்ல பயன்களை பெறும்.
எட்டாம் இடத்தில் உள்ள குரு, ஒன்பதாம் இடத்துக்கு மாறி ராசியை பார்க்கப் போகிறார். இதுவும் நல்ல யோக அமைப்பு. கேது 11வது இடத்துக்கு மாறப் போகிறார். 6, 9, 11 ஆகிய நல்ல இடங்களிலும் மாற்றங்கள் நிகழ்கிறது. மூன்று மூன்று கிரகங்களின் மாற்றமும் துலாமுக்கு சாதகமாக உள்ளது. எல்லாவற்றிலும் நன்மை நடக்கும். தொட்டது துலங்கும்.
வீடு, வாகனம் வாங்கக் கூடிய சூழல் உருவாகும். உயர்கல்வி வாய்ப்பு தேடி வரும். நீண்ட காலமாக திருமணமாகாதவர்களுக்கு திருமணமாகும். பிரிந்த தம்பதி இணைவார்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் போட்டி குறைந்து லாபம் அதிகரிக்கும். கலைத்துறையிலும் நிறைய வாய்ப்புகள் வரும். வயதுக்கு ஏற்ப அனைவருக்கும் நல்ல மாற்றங்கள் நிச்சயம் வரும்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிந்து இறங்கி முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். பெண்களுக்கும் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். குடும்பத்திலும் நல்ல ஆரோக்கியமான சூழல். 2025 மொத்தமாக உங்களுக்கு நல்லதை மட்டுமே செய்யும்.
விருச்சிகம் (Puthandu rasi palan for viruchigam): விருச்சிக ராசிக்கு ராசிநாதன் செவ்வாயில் நீட்சம் ஆகியிருப்பது லேசாக ஆட்டம் காண வைக்கும். முதல் ஆறு மாதங்கள் சுமாராகத்தான் இருக்கும். எதை நினைத்தாலும் பயமாக இருக்கும். முடிவு செய்வதில் தாமதமாகும். இருப்பினும் குரு பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் மே மாதம் வரை பெரிய பிரச்னைகளும் வராது. சாதகம், பாதகம் கலந்து வரும்.
நான்காம் இடத்தில் உள்ள சனி ஐந்தாம் இடத்துக்கு பெயர்ச்சியாகவுள்ளார். நான்காம் இடத்தில் அர்த்தாஷ்டாம சனியால் வேலை, தொழிலில் பிரச்னைகள் வந்திருக்கும். சனி ஐந்தாவது இடத்துக்கு செல்வதால் யோகங்கள் கிடைக்கும். ராகு - கேது மாற்றமும் பெரிய பிரச்னைகளை கொடுக்காது. இருப்பினும் வேலையில் சற்று அலைச்சல் இருக்கும்.
குரு எட்டாவது இடத்துக்கு பெயர்ச்சியாகி, இரண்டாம் இடத்தை பார்க்க உள்ளார். இதனால் வருடத்தில் இரண்டாம் பாதியில் கஷ்டப்பட்டாலும் பண வரவு நிச்சயம். வெளிநாடு, வெளிமாநில பயணங்கள் கைக்கூடும். பயணத்தில் வெற்றி கிடைக்கும். திருமண அமைப்புகள் உண்டு.
தனுசு (Puthandu rasi palan for Dhanusu): தனுசு ராசிக்கு இந்தாண்டு அற்புதமாக இருக்கும். மே மாதத்துக்குப் பிறகு குரு தன்னுடைய ராசியில் இருந்து பார்ப்பது தனுசு ராசிக்கு சிறப்பான பலன்களை தரும். மூன்றாம் இடத்தில் உள்ள சனி, நான்காம் இடத்துக்க அர்த்தாஷ்டம சனியாக மாற உள்ளார். இருப்பினும் மூன்றாம் இடத்துக்கு ராகு வந்துவிடுவார். அதனால் பெரியளவுக்கு பிரச்னைகள் இருக்காது.
முதல் நான்கு மாதங்கள் சில சிக்கல்கள், பொருளாதார பிரச்னைகள் ஏற்படும். வருடத்தில் பிற்பகுதி சிறப்பாக இருக்கும். எதிலும் சாதகமான சூழல் உருவாகும். மனக்குறைகள் நீங்கும். ஏழாம் இடத்தில் குரு பகவான் வருவதால் திருமண உறவு நன்றாக இருக்கும்.
தைரியம் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பீர்கள். வேலை, தொழிலில் போட்டியாளர்கள் குறைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். உங்கள் அந்தஸ்து உயரும். முக்கியமான நேரத்தில் உதவிகள் தேடி வரும். மொத்தத்தில் ஆண்டு நிறைவாக இருக்கும்.
Weather Data Source: Wettervorhersage 21 tage