கோவை: கோவை குண்டு வெடிப்பு குற்றவாளி பாஷாவுக்கு வீரவணக்கம் செலுத்தியதன் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி சீமான் வாக்கு பிச்சை எடுக்கின்றனர் எனவும், பாஷாவை 'அப்பா' என்று சீமான் அழைத்த நிலையில், குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அப்பா இல்லையா என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கு தமிழக அரசு துணை போவதாக கூறி பாஜக சார்பில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கோவை காந்திபுரம் பகுதியில் கருப்பு தின பேரணி நடைபெற்றது.
இதில் வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்ட இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்றதாகக் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக பேரணியில் பேசிய அண்ணாமலை,"கோவையில் நடைபெற்ற சம்பவத்தில் உயிரிழந்த குபியனின் முதல் இலக்கு துணிக்கடை. இரண்டாவது இலக்கு மாநகர காவல் அலுவலகம். மொத்தம் ஏழு இடங்களில் குண்டு வெடிக்க இலக்க வைத்திருந்தான். முதலில் நாங்கள் செத்திருக்க மாட்டோம் நீங்க தான் செத்து இருப்பீர்கள். முபீன் பதிவு செய்த ஏழு நிமிட வீடியோ விரைவில் வெளியாகும். அக்டோபர் 19ஆம் தேதி குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு நான் மக்கள் முன்பாக பையத் கொடுத்து இருந்தால் ஏழு நிமிட வீடியோ போட்டிருந்தால் வீட்டில் காகிதத்தில் ஏழு இலக்குகளை எழுதி இருந்தான்.
அக்டோபர் ஒன்பதாவது தேதி காவல் நிலைய அலுவலகத்தை தகர்க்க உமர் பாரூக் குன்னூரில் ஒளிந்திருந்தான். இங்கு இருக்கக்கூடிய காவல்துறை நன்றாக வேலை பார்க்கிறான். இன்றுவரை இந்த வழக்கில் தேசிய புலனாய்வு ஆணையம் 18 பேரை கைது செய்துள்ளனர் நான்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். கோவைக்கு என்ஐஏ வேண்டும் என்ற கடிதத்திற்கு அமித்ஷா இன்று பதில் கடிதம் அனுப்பியுள்ளார். கோவைக்கான என்ஐஏ அலுவலகத்திற்கு பரிசீலனை செய்யப்படும் என்று பதில் கடிதம் அனுப்பி உள்ளார்
இங்கு என்ஐஏ அலுவலகம் வரட்டும். பாஷா இறந்து போனவுடன் ஒரு ஒருத்தராக கிளம்பி வருகிறார்கள் அண்ணன் சீமான் சொல்கிறார் தகப்பனார் என்று.. பிப்ரவரி 1998 ஆம் ஆண்டில் பாஷா மைசூரில் வெடி மருந்து வாங்கி வந்தார். கோவிலில் வெடித்த வெடி மருந்து மைசூரில் வாங்கியது. 50 பேர் உயிரிழந்தனர். 50 பேருக்கு அப்பா இல்லையா? இவருக்கு மட்டும் தான் அப்பாவா? 200 பேர் படுகாயம். அவர்களுக்கு கை இல்லை கால் இல்லை. அவர்களுக்கு அப்பா இல்லை? பாஷா உங்களுக்கு அப்பா? ஓட்டு பிச்சை எடுக்கிறீர்கள்
எங்களுக்கும் உங்கள் வழியில் அரசியல் பண்ண தெரியும். ஆனால் அது வேண்டாம். நாங்கள் இயற்கையின் வழியில் அரசியல் செய்ய விரும்புகிறோம். திருமாவளவன் சொல்கிறார் அவர் தியாகிக்கு வீர வணக்கம் என..
ஓட்டுப் பிச்சை எடுக்க உங்களை போல் யாரும் இல்லை உங்களிடம் நாங்கள் பழகிக் கொள்கிறோம். இந்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஒன்றை ஒன்று சொல்லிக் கொள்கிறேன். கோவை மக்களே நீங்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.
கோயம்புத்தூரில் வளர்ச்சி இந்த ஓட்டு பிச்சையால் நடக்காமல் இருக்கிறது. எங்கேயோ போக வேண்டிய கோயமுத்தூர் இன்று அடைந்து நிற்கிறது. இந்த அருமையான ஊர் மோடி அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இந்த ஊர் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பு அக்டோபர் மாதம் சொல்லியது கோவையில் ஒருவர் ஃபையத் கொடுத்து அங்கு உள்ளவர்களை கொல்ல இருக்கிறான் என்று.. நாம் விழித்துக் கொள்ள வேண்டும். இது மாற்றத்திற்கான நேரம்.
2003இல் கோவை நீதிமன்றத்திற்கு அழைத்து வரும்போது குற்றவாளி மோடி இங்கு வந்தால் கொல்வேன் என்று. ஆனால் அவர் இங்கு எத்தனையோ இடங்களுக்கு வந்து சென்றுவிட்டார். நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால் ஒட்டு பிச்சை எடுப்பவர்களை வீட்டுக்கு அனுப்புங்கள். தேர்தல் நேரத்தில் கோவை வந்த பிரதமர் மோடி அவர்கள் ஆர்எஸ் புரம் பகுதியில் குண்டுவெடிப்பில் உயிரிழந்த 58 பேருக்கு அஞ்சலி செலுத்தினார். அதில் உயிரிழந்த இஸ்லாமியருக்கும் சேர்த்து தான் அஞ்சலி செலுத்தினார்.
எங்களைப் பொறுத்தவரை இந்தியர், தமிழர் தான் எங்கள் அடையாளம். 1993 ஆகஸ்ட் மாதம் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை வெடிவைத்து தகர்த்தார்கள். கோவையில் காவல்துறைக்கு ஒரு மெசேஜ் கொடுத்துள்ளோம்
ஆர்ப்பாட்டம் செய்கிறோம் என்று சொன்னால் பாஜகவை வீட்டில் வந்து கைது செய்கிறீர்கள். ஆயிரம் மேற்பட்டோர் தீவிரவாதத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளார்கள் அதை என்ன செய்தீர்கள். எங்களுக்குள் எழுச்சி வந்து விட்டது அடக்கி வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறோம்.
காவல்துறையினர் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். ஒரு முறை கட்டுப்பட்ட இருந்து விட்டால் மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாது. இந்த கூட்டத்தில் இருப்பவர்கள் அரசாங்கத்தை எதிர்ப்பு காவல்துறையை எதிர்த்த ஒருவர் கூட குரல் கொடுக்க மாட்டார்கள். அதுபோன்று வரக்கூடிய கூட்டம். அதே மரியாதையை நீங்கள் திரும்ப கொடுக்க வேண்டும் என காவல் துறையினருக்கு வலியுறுத்துகிறேன்" என்றார்.