காயகற்ப மூலிகை என்று சொல்லப்படும கரிசலாங்கண்ணி கீரையில், இரும்புச்சத்து, தங்கச்சத்து அதிக அளவில் உள்ளன.. அதனால்தான், "தங்கம் மூலிகை" என்று இந்த கீரையை அழைப்பார்கள்.
கரிசலாங்கண்ணியில், மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என்று 2 வகைகள் உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணியானது, பார்ப்பதற்கே தகதகவென மின்னும் கலரில் இருக்கும்.. இதில், இந்த மஞ்சள் கரிசலாங்கண்ணிதான் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தும் தன்மை உடையவை..
சத்துக்கள்: இந்த கீரையை உணவில் சேர்த்து கொள்வதால், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகளுக்கு மிகவும் நல்லது.. அவைகளை திறன்பட செயல்பட வைக்கக்கூடியது.. சர்க்கரை நோயாளிகள் இந்த கீரையை அதிகம் சேர்த்து கொள்ளலாம்.. நீரிழிவு நோயை கட்டுபடுத்தக்கூடியது.
சளி, இருமல், தீராத காய்ச்சலை போக்கக்கூடியது.. உடல் எடை குறைப்போருக்கு பெஸ்ட் கீரை இதுவென்றே சொல்லலாம்.. காரணம், உடலில் சேரும் அதிகமான கொழுப்பை இந்த கீரை கரைத்துவிடும்.
மஞ்சள் காமாலை இந்த கரிசலாங்கண்ணியை கீழாநெல்லியுடன் சேர்த்து பயன்படுத்துவார்கள்.. 2 கீரையும் சம அளவு எடுத்து விழுதாக அரைத்துக்கொண்டு, பால் அல்லது மோரில் கலந்து 7 நாட்கள் குடித்தால் நோய் குணமாகும்.. ஈரல் வீக்கமும் குறையும்.. ஆனால், இவைகள் இரண்டுமே மூலிகை இலைகள் என்பதால், புளி, காரம், எண்ணெய் சேர்க்காமல் அந்த நாட்களில் பத்தியம் இருக்க வேண்டும்.
ரத்த சோகை: இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால், ரத்த சோகை தீர்ந்து ரத்தம் விருத்தியடையும்.. இந்த கீரையை நிழலில் உலர்த்தி பொடித்து, சூரணமாகவும் செய்து சாப்பிடலாம்.
குழந்தைகளுக்கு சளி, இருமல் என்றால், இந்த கீரையை சாறு எடுத்து, தேனுடன் கலந்து தந்தால் நிவாரணம் கிடைக்கம். வெறும் இலைகளை வாயில் போட்டு மென்று பல்துலக்கினால், பற்கள் வெண்மையாகும்.. பல் ஈறுகளையும் பலப்படுத்தும்.. இந்த கீரையை 48 நாட்களுக்கு, நெய்யில் கலந்து சாப்பிட்டு, இரவில் பசும் பால் அருந்திவந்தால், ஆண்மைக்குறைவு நீங்கும் என்கிறார்கள்.
தலைமுடி வளர்ச்சி: இந்த வெள்ளை கரிசலாங்கண்ணியை தலைமுடிக்கு பயன்படுத்துவார்கள்... கரிசலாங்கண்ணி சாறு எடுத்து, அதை தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி அந்த எண்ணெயை தலைமுடிக்கு தேய்த்துக் கொண்டால் போதும்,, தலைமுடியின் வளர்ச்சி பெறும். வலுப்பெறும். அதேபோல, கரிசலாங்கண்ணியில் இருந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய்யுடன் சேர்த்து காய்ச்சி எடுத்து வைத்து கொண்டால், பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குறிப்பாக, தலைக்கு தேய்த்து குளித்தால், கண்களுக்கு குளிர்ச்சி கிடைக்கும்.
சமையலுக்கு இந்த கீரையை சேர்த்து கொள்ள முடியாவிட்டாலும், வெறும் இலையை தண்ணீர் விட்டு காய்ச்சி, வாரம் 2 நாட்கள் குடிக்கலாம். இந்த கீரையின் சாறு, விஷ பூச்சிகளின் ஆபத்தில் இருந்து காக்கக்கூடியது.ஏதாவது விஷ ஜந்து கடித்துவிட்டால், கரிசலாங்கண்ணி இலையை அரைத்து, விஷக்கடி ஏற்பட்ட இடத்தில் வெள்ளைத் துணியால் கட்டிவிட்டால், விஷம் முறிந்துவிடும்.
மஞ்சள் காமாலை: பெண்கள் பயன்படுத்தும் கண் மை, இந்த கீரையின் சாறிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. கரிசலாங்கண்ணியை அரைத்துச் சாறு எடுத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் காய்ச்சி தடவி வந்தால் கூந்தல் கறுமை நிறத்துடன் செழித்து வளரும். குளிக்கும் முன் உடல் முழுவதும் நல்லெண்ணெயை தேய்த்தால் பித்த வெடிப்புகள் மறைந்து விடும். கரிசலாங்கண்ணியைச் சமைத்துச் சாப்பிட்டு வருவதன்மூலம் மஞ்சள்காமாலை உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குணமாகும்.
இந்த கீரை கசப்பாக இருக்கும். இந்த கரிசலாங்கண்ணியில் டீ போட்டு குடிக்கலாம்.. சூப் போல செய்து சாப்பிடலாம்.. ரத்த அழுத்தம், தோல் நோய்கள், மூலம், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், போன்றவைகளை இந்த கரிசலாங்கண்ணி குணப்படுத்தும். இவ்வளவு மகத்துவம் உள்ளதால்தான், ராமலிங்க வள்ளலார் முதல் ஔவையார் வரை இந்த கரிசலாங்கண்ணியின் மகத்துவத்தை பற்றி நிறைய எழுதி வைத்திருக்கிறார்கள்.