விவசாயிகளுக்கு ஜாக்பாட்.. உயர்கிறதா உதவித்தொகை?

post-img

சென்னை: விவசாயிகள் உதவித்தொகைக்காக கோடிக்கணக்கான விவசாயிகள் மத்திய அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், அதுகுறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.


நாடு முழுவதுமுள்ள விவசாயிகள் பலன்பெறும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதுதான், பிரதம மந்திரி கௌரவ நிதி உதவித்திட்டம் அதாவது பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (பிஎம் கிசான்) என்ற திட்டமாகும்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளை தன்னம்பிக்கை கொண்டவர்களாக மாற்றும் வகையில் இந்த செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இந்த திட்டத்தின் மூலம் மத்திய அரசு சார்பாக விவசாயிகளுக்கு பண உதவி செய்யப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு தவணைக்கு 2000 ரூபாய் வீதம், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 6000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இதன் மூலம் எத்தனையோ விவசாயிகள் நாடு முழுவதும் பயன்பெற்று வருகின்றனர்.


தகுதிகள்: இணைய, நிலத்தின் உரிமையாளராக நீங்கள் இருக்க வேண்டும். அதேபோல, ஒருவேளை, மற்றவர்களின் நிலத்தில் விவசாயம் செய்தாலும், அந்த நிலம் அவரது பெயருக்கு பதிலாக, அவரது தந்தையின் பெயரிலோ, அல்லது அவரது தாத்தாவின் பெயரிலோ இருந்தால், இந்த திட்டத்துக்கு அவர் விண்ணப்பிக்க முடியாது.


பிஎம் கிசான்: இந்த பலனை பெற விரும்பினால், விவசாயிகளின் பிஎம் கிசான் கணக்குகளுடன் ஆதார் நம்பரையும் இணைக்க வேண்டும்.. அதேபோல, பயனாளிகளின் கணக்கு விவரங்களையும் சரியாக இணைக்க வேண்டும்.. தவறாக இருந்தாலும், ஆதார் சரிபார்ப்பு முடிக்கப்படாமல் இருந்தால் ரூ.6000 நிதியுதவி கிடைக்காமல் போய்விடும்.


எனவே, இந்த திட்டத்தின் மூலம் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருள்கள் கொள்முதல் செய்வதற்காக தவணை உதவித் தொகை பெறுவதற்கான நில ஆவணங்கள், ஆதார் எண் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்து விவசாயிகள் பயன்பெறலாம்.


ஒருவேளை, வங்கி கணக்கு இல்லாதவர்கள் இந்தியா பேமெண்ட் வங்கி மூலம் ஜீரோ பேலன்ஸ் அடிப்படையில் கணக்கு தொடங்கி அதில் ஆதாரை இணைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு பெரிய சான்ஸ்.. இதுதான் கடைசி தேதி.. மிஸ் பண்ணாதீங்க.. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு
பணவீக்கம்: ஆனாலும், பணவீக்கமும், விலைவாசியும் தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வருவதால், பிஎம் கிசான் திட்டத்தின் தொகையையும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை விவசாயிகள் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள்.. இந்த கோரிக்கையைதான் அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது.


விரைவில் 5 மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், பிஎம் கிசான் தொகையை, 50 சதவீதம் அதாவது ரூபாய் 2,000 முதல் ரூபாய் 3,000 வரை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல்கள் வட்டமடிக்கின்றன. அப்படியானால், தற்போதுள்ள 6 ஆயிரத்தை சேர்த்து, மொத்தம் ரூ.8 ஆயிரமாக உயர்த்தலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம்.. இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


விரைவில் அறிவிப்பு: தேர்தல் சமயத்தில் அறிவிப்பு வெளியாகும்பட்சத்தில், பாஜக அரசுக்கு விவசாயிகள் மத்தியில் மிகுந்த ஆதரவு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல, விவசாயிகள் உதவித்தொகைக்காக கோடிக்கணக்கான விவசாயிகள் மத்திய அரசின் அறிவிப்புக்காக காத்திருக்கும் நிலையில், தீபாவளிக்கு முன்னதாக 15வது தவணை வழங்கப்படும் என்று புது தகவல்கள் வெளியாகி உள்ளன.
கணக்குகள்: பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 15வது தவணையை பெற 8 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் காத்திருக்கிறார்களாம்.. எனவே, இந்தத்தொகை நவம்பர் 12ம் தேதி வழங்கப்படலாம் என்றும், தீபாவளிக்கு முன்னதாக விவசாயிகளின் கணக்குகளுக்கு பணத்தை அனுப்புவதுதான் மத்திய அரசின் திட்டமாக இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


பிரதமர் கிசான் திட்டத்தின் 14வது தவணை கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்ட நிலையில், 15வது தவணை வழங்கவுள்ளது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனாவின் 15 வது தவணைக்கு, பயனாளிகள் eKYC புதுப்பிப்பை பெறுவது கட்டாயமாகும் என்றும் இல்லாவிட்டால் அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Post