டெல்லி: தென் மாநிலங்களில் பாஜக ஒரு மாநிலங்களில் கூட ஆட்சியில் இல்லாத நிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் வட இந்தியா - தென் இந்தியா பிரச்சனையை விட பாஜகவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஒன்று இருக்கிறது. அது என்ன? விரிவாக பார்ப்போம்.
3 மாநில தேர்தல்: 2024 மக்களவைத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மூன்று வட மாநிலங்களில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. எதிர்பார்க்கப்பட்டதை விட, கருத்துக்கணிப்பு முடிவுகளை காட்டிலும் கூடுதல் இடங்களில் வெற்றிபெற்றது. இதனை தொடர்ந்து அரசியல் மற்றும் தேர்தல் போக்கை கணிக்கும் நிபுணர்கள், 2024 தேர்தலில் பாஜகவுக்கு சாதகமாக காற்று வீசுகிறது என தெரிவித்து வருகிறார்கள்.
ஆனாலும் முழு திருப்தி பாஜகவுக்கு இருக்காது. இமாச்சல், கர்நாடகா மாநில தேர்தல் தோல்வி, இந்தியா கூட்டணியின் எழுச்சி, மணிப்பூர் கலவரங்களை தாண்டி, இந்த 3 மாநில தேர்தல் வெற்றி என்பது 2024 தேர்தலுக்கான பாஜகவின் எழுச்சி என்று சிலர் கணித்து உள்ளார்கள். ஆனால், அவர்கள் கூறுவதுபோல் அது அவ்வளவு எளிதானது அல்ல. பாஜக எதிர்கொள்ளும் மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பது எதிர்க்கட்சிகள் அல்ல. 3 மாநில தேர்தல் வெற்றியின் காரணமாக அந்த கட்சியினர் இடையே உற்சாகம் நிலவி வருகிறது. தேர்தல் கெமிஸ்ட்ரி: ஆனால், மக்களை பொறுத்தவரை தங்களின் பிரதமராக இந்த ஜனநாயக உலகின் மிக உயர்ந்த தலைவராக இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். சர்வதேச அளவில் பிரபலமான, உலகளாவிய பார்வையை கொண்ட, 2047 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக முன்னேற்றும் இலக்கை கொண்டவராக இருக்க வேண்டும் என கருதுகிறார்கள். தேர்தல்களை எடுத்துக்கொண்டால் அதன் எண்களுக்கும் தலைவருக்குமான கெமிஸ்ட்ரி கைகொடுக்க வேண்டும். இந்த கெமிஸ்ட்ரி தற்போது பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. இந்த தேர்தல் கணிதம் வேலை செய்ய வேண்டும். ஒவ்வொரு தொகுதிக்கும் சரியான வேட்பாளர்களை அறிவித்து முழு தீவிரத்துடன் களமாட வேண்டும்.
இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் பாஜக முழு திருப்தியுடன் வெற்றிக்களிப்பில் இருப்பது அக்கட்சிக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல். உத்தரபிரதேசத்தில், மகாராஷ்டிராவில் அதிகரித்த தொகுதிகளை பார்க்கிறீர்கள். மேற்கு வங்கத்திலும் தொகுதிகளை அதிகரித்துள்ளன. பீகாரிலும் ஓரளவு நல்ல எண்களைப் பார்க்கிறீர்கள். யுபி-யில் அதிகபட்சமாகவும், கர்நாடகாவிலும் பாஜகவால் தனது இடத்தை தக்கவைக்கவும் முடியும். மக்களவைத் தேர்தலில், மக்கள் பிரதமர் யார் வர வேண்டும் என்ற அடிப்படையிலேயே கவர்ச்சிக்காக வாக்களிக்கிறார்கள்.
அச்சுறுத்தல் எது?: அதில் உள்ளூர் பிரச்சினைகளை பற்றி சிந்திக்க மாட்டார்கள். இந்த விஷயத்தில், பாஜகவுக்கு சாதகமான நிலை தொடர்கிறது. நாம் 2003 ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயக கூட்டணி மூன்று மாநிலங்களிலும் வெற்றி பெற்றது. கட்சி மிகவும் உற்சாகமாக இருந்தது. எனவே முன்கூட்டியே தேர்தலை நடத்த முடிவு செய்தார்கள். அந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நிலை நிலவி வந்தது, ஆனால் இறுதியில் அக்கட்சி 8 - 9 இடங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. எனவே இந்த 3 மாநில தேர்தல் வெற்றியை வைத்து அவர்கள் முழு திருப்தி அடைவதே அவர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
காங்கிரஸ் தலைமை தங்களின் கொள்கைகள், செயல்பாடுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பார்வை வேண்டும். அவர்கள் நாட்டை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறார்கள்? என்பதை தெரிவிக்க வேண்டும். இந்த பார்வை என்பது சாதி அடிப்படையிலான ஒருமித்த கருத்தாக மட்டும் இருக்க முடியாது. அதேபோன்று சிறுபான்மையினரை ஈர்ப்பதாக மட்டும் இருந்துவிட முடியாது. இந்துக்களின் வாக்குகளைப் பிரிப்பதாகவும் இது இருக்க முடியாது. நாடு வளர்ந்து சர்வதேச அளவில் உயர்ந்த இடத்தில் இந்தியா வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுதான் இப்போது தலைசிறந்த இந்தியா. பாஜகவை உண்மையாகவே சவால் செய்யும் நிலையில் காங்கிரஸ் இருப்பதாக நான் பார்க்கவில்லை.