38 வயதில் ரூ.154 கோடிக்கு அதிபதி! நாக சைதன்யாவின் சொகுசு வாழ்க்கை!

post-img

ஆந்திரா: இரண்டாவது மணம் செய்துகொண்டுள்ள நாக சைதன்யாவின் சொத்து மதிப்பும் அவரது ஆடம்பர வாழ்க்கைப் பற்றியும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா ஆகிய இருவருக்கும் கடந்த 4 ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள அன்னபூர்னா ஸ்டுடியோவில் திருமணம் நடைபெற்றதையடுத்து இந்தப் புதுமணத் தம்பதி முதன்முறையாக ஆந்திராவில் உள்ள ஸ்ரீசைலம் கோயிலுக்கு வந்து இன்று சாமி தரிசனம் செய்துள்ளனர்.



நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவும் நடிகை சமந்தா ரூத் பிரபுக்கும் இடையே கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ஆனால், அந்த மணவாழ்க்கையிலிருந்து 2021 ஆம் ஆண்டு வெளியேறினார். அதன்பின்னர் அவரது உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதாக சமந்தா அளித்த பேட்டி பலரைக் கண்கலங்க வைத்தது.
விவாகரத்துக்குப் பின்னர் நாக சைதன்யா தனித்து வாழ்த்து வந்தார். இப்போது அவருக்கும் சோபிதா துலிபாலா திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணம் ஆடம்பரமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நாக சைதன்யா சொத்து விவரங்கள் பற்றிய சில தகவல்கள் ஊடகங்களில் கசிந்து வருகிறது. டைம்ஸ் ஆஃப் இந்தியா அளித்துள்ள தகவலின்படி இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.154கோடி எனத் தெரியவந்துள்ளது. இதை அவர் படங்களில் நடித்துப் பெற்ற சம்பளத்தைப் போலவே பிராண்டுகள் மூலம் செய்து கொண்ட ஒப்பந்தம் மற்றும் பலதுறைகளில் செய்த முதலீடு என அனைத்திலிருந்தும் சம்பாதித்திருக்கிறார்.
வெறும் 38 வயது நிரம்பிய நாக சைதன்யாவுக்கு இந்தளவுக்குச் சொத்துகள் இருப்பது மிகப்பெரிய அளவில் ஆச்சரியத்தை அளித்துள்ளது. என்னதான் அவரது அப்பா புகழ்மிக்க நடிகர் என்றாலும், தனிப்பட்ட வகையில் அவர் அடைந்துள்ள வெற்றி பலரையும் வியக்க வைத்துள்ளது.

இவர் 2009இல் வெளியான ஜோஷ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் பல படங்களில் நடித்து பணம் சம்பாதித்தார். தெலுங்கில் மட்டும் இல்லாமல் கடந்த 2022 ஆம் ஆண்டில் பாலிவுட் திரைத்துறையிலும் அறிமுகமானார். இந்தியா டுடேவின் தரவுகளின் படி இவர் ஒரு படத்திற்கு சுமார் 10 கோடி வரை பெறுகிறார் எனக் கூறப்பட்டுள்ளது. அதைக் கடந்து வெப் தொடர்களிலும் நடத்து வருகிறார். பல நிறுவனங்கள் இவரை விளம்பரத்திற்காக ஒப்பந்தம் செய்துள்ளன. அந்த பிராண்டு ஒப்பந்தங்கள் மூலம் அவர் வருமானம் ஈட்டி வருகிறார்.
இவரது தந்தை நாக்கார்ஜுனா தெலுங்கு சினிமா உலகில் இருக்கும் பணக்கார நடிகர்களில் ஒருவர். அவர் தெலுங்கு மொழி படங்களைக் கடந்து தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். அவை வெற்றிப் படங்களாகவே அமைந்தன. ஆனாலும் அவர் தொடர்ந்து நடிக்கவில்லை. அவரது மகன் என்பதால் நாக சைதன்யா பிறவிப் பணக்காரர்தான். அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஒரு பங்களா வாங்கினார். இந்த பங்களா ஜூப்ளி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. அதன் மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் இருக்கும் என்று தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி அறிய முடிகிறது.
இதைத் தவிர உணவகங்களை நடத்தி வருகிறார். அதில் முதலீடுகளைச் செய்துள்ளார். இவரிடம் ரூ. 1.75 கோடி மதிப்பிலான ஃபெராரி எஃப் 430 கார் உள்ளது. ரூ.3.40 கோடி மதிப்பிலான ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி ஒன்றையும் வைத்துள்ளார். ரூ. 3.5 கோடி மதிப்புள்ள சில்வர் போர்ஸ் 911 ஜிடி3 ஆர்எஸ் என்ற ஆடம்பர காரையும் வைத்துள்ளார். மேலும் பிஎம்டபுள்யூ உட்பட இரண்டு சொகுசு பைக்குகளை வைத்திருக்கிறார்.

Related Post