நிலாவில் ஆட்டம் காட்டிய "ரம்பா".. விக்ரம் லேண்டர் கண்டுபிடித்த "பிளாஸ்மா"..

post-img

சந்திரயான் 3 நிலவில் தீவிரமான ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில்தான் பிளாஸ்மா ஆய்வு பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பிளாஸ்மா: விக்ரம் லேண்டரில் இருக்கும் 8 கருவிகளில் Langmuir probe கருவி முக்கியமானது ஆகும். இதை ரம்பா என்று அழைப்பார்கள். அதாவது Radio Anatomy of Moon Bound Hypersensitive Ionosphere and Atmosphere-Langmuir Probe (RAMBHA-LP).

இந்த ரம்பா கருவியானது நிலவில் இருக்கும் பிளாஸ்மாவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. 5 செமீ நீளம் இருக்கும் சென்சார் கருவி மூலம் இந்த ஆய்வு செய்யப்படும். இந்த பிளாஸ்மாவை ரத்த பிளாஸ்மா உடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். இந்த பிளாஸ்மா என்பது அதிக வெப்பத்தில் பிரிந்து காணப்படும் எதிர் எலக்ட்ரான்கள் ஆகும்.

மிக மிக அதிக வெப்பத்தில் இவை பிரிந்து கிடைக்கும். இந்த நிலையில்தான் ரம்பா மூலம் நிலவில் இந்த பிளாஸ்மா கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. நிலவின் தென் பகுதியில் குறைவான அளவே பிளாஸ்மா உள்ளது. இந்த பிளாஸ்மா கூட நிலவு உருவான தொடக்கத்தில் உருவான பிளாஸ்மா ஆகும்.

நிலவில் பிளாஸ்மாவின் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஒருவகையில் நல்ல விஷயம். ஏனெனில் இது வானொலி அலைகள் விண்வெளியில் பரவும் விதத்தை பாதிக்கிறது. பிளாஸ்மா இருப்பால் ரேடியோ அலைகள் பாதிக்கப்படுகின்றன. பிளாஸ்மா அடர்த்தியானது இதனால் ரேடியோ அலைகள் அதிகமாக சிதறடிக்கப்படுகின்றன.

அந்த வகையில் நிலவில் பிளாஸ்மா குறைவாக இருப்பதால் அங்கே ரேடியோ தொடர்பை எளிதாக மேற்கொள்ள முடியும். இதன் மூலம் நிலவில் பேஸ் அமைப்பது, அங்கே தொலைத்தொடர்பு சாதனங்களை அமைப்பது எளிதாகும். சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது.

இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருக்கிறது. பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

பிரக்யான் ரோவர் நிலவில் மெதுவாக நகர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவர் தங்களுடன் கொண்டு சென்ற எல்லா கருவிகளையும் நிலவில் இறக்கி உள்ளது. பல்வேறு சோதனைகளை செய்ய நிலவில் சந்திரயான் 3 மூலம் பல்வேறு கருவிகள் களமிறக்கப்பட்டன.

பல்வேறு கண்டுபிடிப்புகள்: விக்ரம் லேண்டரில் இருந்து சாஸ்ட் எனப்படும் Thermo physical experiment (ChaSTE) கருவி நிலவில் கடந்த சனிக்கிழமை இறக்கப்பட்டது. இதன் ரீடிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

அதன்படி நிலவில் இருக்கும் மணல் பரப்பு, உட்பரப்பில் செய்யப்பட்ட சோதனையில் அவை பெரிதாக வெப்பத்தை கடத்தவில்லை. அதேபோல் இங்கே வெப்பம் வேறு வேறாக இருக்கிறது. அதாவது ஒரே வெப்பம் இல்லை. வெப்பத்தில் பெரிய மாறுபாடுகள் உள்ளன என்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பகிர்ந்துள்ள ஒரு வரைபடம், நிலவின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுபாடுகளை 0 முதல் 70 டிகிரி செல்சியஸ் வரை விளக்கியுள்ளது, இது பல்வேறு ஆழங்களில் லேண்டரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆழம் மாற மாற வெப்பநிலையும் பூமியில் இருப்பது போலவே மாறி உள்ளது. நிலவில் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்படுவது இதுவே முதல்முறை. கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த கண்டுபிடிப்பு எப்படி சாத்தியம் ஆனது என்று இஸ்ரோ விளக்கி உள்ளது.

கனிமங்கள்: இன்னொரு பக்கம் விக்ரம் லேண்டரின் லேசர் மூலம் இயங்கும் பிரேக்டவுன் ஸ்பெக்ட்ரோஸ்கோப், நிலவின் தென் துருவத்திற்கு அருகிலுள்ள மேற்பரப்பில் கந்தகம் அதாவது சல்பர் இருப்பதை கண்டுபிடித்துள்ளது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

Related Post