கடைசியா போன சதுர்த்திக்கு கொழுக்கட்டை எடுக்க வந்தப்போ உன்ன பார்த்தது..

post-img

சென்னை: காலத்திற்கு ஏற்ப கொண்டாட்டங்களும் மாறி வருகிறது என்பதைப்போல, விநாயகர் சதுர்த்தியை வீட்டில் கொழுக்கட்டை செய்வதோடு, சமூகவலைதளங்களில் மீம்ஸ் போட்டும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள்.


நம்மூரில் ஒவ்வொரு பண்டிகைக்கும் என சிறப்பு பதார்த்தங்களும் உண்டு. அந்தவகையில் விநாயகர் சதுர்த்தி என்றால் கொழுக்கட்டையை விதவிதமாக செய்து அசத்தி விடுவார்கள். சமீபகாலமாக விநாயகர் சிலைகளையுமே அப்போதைய டிரெண்ட்டுக்கு ஏற்ற மாதிரி, விதவிதமான கெட்டப்புகளில் செய்து அதை வைத்து விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவதையும் நம் மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

 

இந்த வருடமும் அதற்கு விதிவிலக்கல்ல.. கொழுக்கட்டை, விநாயகர் சிலை மாதிரி, விதவிதமான மீம்ஸ்களையும் போட்டு சமூகவலைதளங்களை கலகலக்க வைத்து வருகின்றனர்.


விநாயகர் சதுர்த்தியான இன்றுதான் புரட்டாசி மாதமும் பிறந்துள்ளது என்பதால், பிள்ளையாருக்கு ஹேப்பி பர்த்டே சொல்லி, பிளாக் பாரஸ்ட் கேக் வெட்ட முடியவில்லையே என வித்தியாசமாக மீம்ஸ்களில் பீல் பண்ணி இருக்கின்றனர் நெட்டிசன்கள்.


இதோ அப்படியாக சமூகவலைதளங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான சில மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...

 

 

 

 

Related Post