முருங்கைக்காய்.. இந்த 10 இலையை மென்று தின்றாலே போதும்.. நுரையீரலின் நலன் காக்கும் அரு

post-img

சென்னை: ஆரோக்கியமான சூழல், சத்தான உணவுமுறைகளை கொண்டே, நுரையீரலை நம்மால் எளிதாக பாதுகாக்க முடியம். இதற்கு சில மூலிகைகளை, காய்கறிகளை உணவில் சேர்த்து கொண்டாலே போதும்.
காற்று மாசுபாடு, புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை போன்ற காரணங்களினால், ஆஸ்துமா, நுரையீரல் தொற்று, மூச்சு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகரித்து வருகிறது.. காற்று மாசுபாடு காரணமாக மட்டுமே, வருடத்துக்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு அச்சம் தெரிவித்துள்ளது..
உணவுப்பழக்கம்: முறையான உணவுப்பழக்கத்துடன், நோய்க்கிருமிகளும், நுண்ணுயிரிகளும், நுரையீரலை தாக்காமல் பார்த்துகொண்டாலே ஏற்படக்கூடிய பெரும் ஆபத்தை தவிர்க்கலாம்.
அந்தவகையில், முருங்கைக்காயை அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்றவை நிறைந்துள்ள இந்த காய்களை சளி பிரச்சனை பாதிப்பு உள்ளவர்கள் தாராளமாக எடுத்து கொள்ளலாம்.. கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்களுக்கும், நீரிழிவு நோயாளிக்குக்கும் இது மிகவும் சிறந்தது.
எந்த அளவுக்கு முருங்கைக்காய் நன்மைகளை தருகிறதோ, அதுபோலவே, நுரையீரலை பாதுகாக்கவும் இந்த காய் பேருதவி புரிகிறது.. தொண்டை கரகரப்பு, சளி, தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் முருங்கை சிறந்தது.. இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலுக்கு, சிறந்த தீர்வு முருங்கைக்காய்தான் என்கிறார்கள்..
நச்சுத்தன்மை: இஞ்சி - பூண்டு இரண்டையுமே சமையலில் நிறைய சேர்த்து கொள்ளலாம். நுரையீரலில் உள்ள நச்சுத்தன்மையையும், மாசுகளையும் இஞ்சி பூண்டு நீக்குகின்றன.. 3 பூண்டு பற்களை வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டாலே, புற்றுநோய் தாக்கும் வாய்ப்பு 44 சதவிகிதம் குறைகிறதாம்.
10 துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வந்தாலே நுரையீரல் பலப்படும்.. சளி, இருமல் அதிகமானால், ஆடாதோடை மூலிகை ஒன்று போதும்.. நுரையீரலில் இருக்கும் சளியை வெளியேற்றிவிடும்.
நுரையீரல் வீக்கம்: ஆன்டிஆக்ஸிடன்ட் சத்துகள் நிறைந்த முட்டைகோஸ், காலிஃபிளவர்கள், பீட்ரூட், புரோக்கோலி போன்றவற்றை சமையலில் நிறைய சேர்த்து கொள்ளலாம்.. அதிலும் புரோக்கோலியால், நுரையீரலில் ஏற்படும் சேதங்கள் தடுக்கப்பட்டுவிடும்.. தடுப்பு சக்திகள் இந்த புரோக்கோலியில் நிறைய இருக்கிறதாம்.. பாதாம், முந்திரி, வால்நட், பிஸ்தா, ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் நுரையீரலுக்கு தேவையான சத்துக்களை வாரி வழங்குகின்றன.,..
சர்க்கரைவள்ளிக் கிழங்கு, கேரட், பரங்கிக்காய், பப்பாளி, ஆரஞ்சு பழங்களில் கார்டீனாய்ட், பீட்டாகரோட்டின், வைட்டமின் A நிறைந்திருப்பதால், நுரையீரலுக்கு வலு சேர்க்கின்றன.. கொய்யா, ஆரஞ்சு, கிவி, எலுமிச்சை, சாத்துகுடி, மாதுளை, பைன் ஆப்பிள் போன்ற பழங்கள் நுரையீரலை பலப்படுத்துபவை.
கிரீன் டீ: அடுத்ததாக, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த கிரீன் டீ குடிக்கலாம்.. நுரையீரல் வீக்கத்தை குறைப்பதில் கிரீன் டீ பெரிதும் உதவுகிறது.. கடந்த 2017-ல் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 1000 பேருக்கு, ஒரு நாளைக்கு 2 கப் கிரீன் டீ குடிக்க தந்துள்ளார்.. அப்போது, கிரீன் டீயை குடிக்காதவர்களைவிட , கிரீன் டீ குடித்தவர்களின் நுரையீரல் செயல்பாடு சிறப்பாக இருந்ததாம்.
தூங்கப்போவதற்கு முன், காய்ச்சிய 1 டம்ளர் பாலில், சிறிது மஞ்சள், மிளகு, 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை பவுடர், ஏலக்காய் பவுடர் சேர்த்து குடித்து வந்தால், நுரையீரலுக்கு மிகவும் நல்லது. கற்பூரவள்ளி இலையில் நுரையீரலை சுத்தம் செய்யக்கூடிய நிறைய பண்புகள் உள்ளதால், சுடுநீரில் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளை போட்டு கொதிக்க வைத்து, தேன் கலந்து குடிக்கலாம்.
கேரட் ஜூஸ்: பீட்ரூட் கேரட் இவை இரண்டையுமே ஜூஸ் தயாரித்து குடித்தால், நுரையீரலில் நச்சுத்தன்மை நீங்கும்.. காரணம், இவைகளில் மக்னீசியம், பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால், நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை குறைப்பதுடன், நுரையீரலின் நச்சுத்தன்மையை எளிதாக நீக்கலாம்.. பூசணி ஜூஸில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளதால், நுரையீரலை பலப்படுத்த உதவுகிறது. தக்காளியை உணவிலும் சேர்த்து கொள்ளலாம்.. ஜூஸ் தயாரித்தும் குடிக்கலாம். இது நுரையீரலின் பாதிப்பை குறைக்கிறது.

 

Related Post