"எல்லா பிணைய கைதிகளையும் ரிலீஸ் செய்கிறோம், ஆனா ஒரு கண்டிஷன்!" ஹமாஸ் படை பரபர.!

post-img

டெல் அவிவ்: இஸ்ரேல் போர் ஒரு வாரத்திற்கு மேலாகத் தொடரும் நிலையில், திடீரென ஹமாஸ் படை அனைத்து பிணையக் கைதிகளையும் விடுவிக்க ரெடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த அக்.7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படை யாருமே எதிர்பார்க்காத வகையில் தாக்குதலை நடத்தினர். மிகக் குறுகிய நேரத்தில் அதிகப்படியான ஏவுகணைகளை வீசினர். மேலும் பாராசூட், ஜீப் மூலமாகவும் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்த ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதலை நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் இஸ்ரேல் நாட்டிற்குள் வந்த ஹமாஸ் படை பலரை பிணையக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இஸ்ரேலும் இறங்கியுள்ளது. காசா பகுதியை நோக்கி ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் போர்: ஒரு வாரத்திற்கு மேலாக இப்படி இரு தரப்பு மாறி மாறி தாக்குதல் நடத்தி வருவதால் அங்கே பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், எங்கு இந்த போர் அங்குப் பிராந்தியம் முழுக்க பரவுமோ என்றும் அஞ்சப்படுகிறது.
இப்படி இஸ்ரேல்- ஹமாஸ் இடையே யுத்தம் 10 நாட்களாக வருகிறது. சமீபத்தில் கூட காசா பகுதியில் உள்ள மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் ஹமாஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹமாஸ் படையிடம் இருந்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
பிணையக் கைதிகள்: ஹமாஸ் படை கடந்த அக். 7ஆம் தேதி தாக்குதல் நடத்திய போது இஸ்ரேல் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பலரைப் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே அவர்கள் அனைவரும் விடுவிக்க ரெடியாக உள்ளதாக ஹமாஸ் படை அறிவித்துள்ளது. இருப்பினும், அதற்கு ஒரே ஒரு நிபந்தனையை மட்டும் அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
அதாவது காசா மீது இஸ்ரேல் சரமாரியாகக் குண்டு மழை பொழிந்துள்ள நிலையில், ஏவுகணைகளை வீசுவதை நிறுத்தினால் பிணையக் கைதிகளாக உள்ள அனைவரையும் உடனடியாக விடுவிக்கத் தயாராக இருப்பதாக ஹமாஸ் மூத்த தலைவர் ஒருவர் குறிப்பிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காசா பகுதியில் நடத்தி வரும் தாக்குதலை நிறுத்தினால் அடுத்த ஒரு மணி நேரத்தில் அனைத்து பிணையக் கைதிகளையும் விடுவிக்க ரெடியாக உள்ளதாக ஹமாஸ் படை அறிவித்துள்ளது.
என்ன காரணம்: காசா நகர மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய விமானப்படை தாக்குதலில் பல நூறு பேர் உயிரிழந்த நிலையில், இப்போது பிணையக் கைதிகளை விடுவிக்க ரெடியாக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. ஒரு வாரத்திற்கு மேலாகப் போர் நடக்கும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவே இந்த மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவர்கள் அனைவரும் இஸ்ரேல் நடத்திய இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

 

Related Post