டெல்லி: மன் கீ பாத் 104 ஆவது நிகழ்ச்சியில் இன்றைய தினம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் எனும் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
இந்த உரை கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் 100 ஆவது எபிசோட் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி வந்தது. இதுவரை 103 உரைகளை நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அளித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதம் 30-ஆம் தேதி 103 ஆவது மன் கீ பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியிருந்தார். இதில் நாட்டிற்காகத் தங்கள் இன்னுயிரை ஈட்டிய 'வீரர்களுக்கு' அஞ்சலி செலுத்தும் வகையில் Meri Maati Mera Desh எனும் நிகழ்ச்சியை முன்னெடுத்தார். இந்த நிலையில் இந்த ஆகஸ்ட் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 104 ஆவது உரை ஒலிபரப்பபடுகிது.
இதில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: நாளை (இன்று) 11 மணிக்கு டியூன் செய்யுங்கள். இந்தியா முழுவதும் எழுச்சியூட்டும் வாழ்க்கை பயணங்களை முன்னிலைப்படுத்துவதில் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.