3 வயதில் பருவமடைந்து, 5 வயதில் தாயான குழந்தை! - பெண் குழந்தைகள் விரைவில் பருவமடைய என்ன காரணம்?

post-img
ஒரு குழந்தையே குழந்தை பெற்றுக்கொண்ட கதை பற்றி உங்களுக்குத் தெரியுமா?. பெரு, நாட்டை சேர்ந்த லீனா மெடினா. 1933-ம் ஆண்டுவிக்டோரியா லோசியா, திபுரேலோ மெடினா தம்பதிக்கு 5வது குழந்தையாகப் பிறந்தார். பிறக்கும்போது சாதாரண குழந்தையாக இருந்த லீனாவிற்கு, 2-ல் இருந்து 3 வயதை அடைதற்கு முன் முதல் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இது ஒரு அசாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், லீனாவின் பெற்றோர் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. தொடர்ந்து 1939-ம் ஆண்டு சரியாக லீனா 5 வயதை அடைந்ததும், அவரது வயிறு பெரிதாகி நடப்பதற்கே சிரமப்பட்டுள்ளார். எனவே லீனாவின் பெற்றோர், மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றுள்ளனர். முதலில், மருத்துவர் தரப்பில், லீனாவின் வயிற்றில், கட்டி இருக்கலாம் என்று சொல்லப்பட்ட நிலையில், அதன் பின் பரிசோதித்துவிட்டு அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளனர். அதாவது, வெறும் 5 வயதை எட்டிய லீனா 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இதைப் பற்றி தீவிரமாக ஆராய்ந்ததில், லீனா முன்கூட்டியே பருவமடைந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, 1939-ம் ஆண்டு லீனா மெடினாவுக்கு ஒரு ஆண்குழந்தையும் பிறந்தது. முன்கூட்டியே பருவமடைதல் (precocious puberty) precocious puberty என்பது, குழந்தைப் பருவத்திலேயே ஒரு நபர், வளர்ந்து பருவமடையும் நிலையை எட்டுவது. மருத்துவர்களின் தகவல்படி, 8 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைக்கு மார்பகம் வளர்ந்து, மாதவிடாய் துவங்கிவிட்டால் அதை precocious puberty என்று குறிப்பிடுவர். அதே மாதிரி, ஆண் குழந்தைகள் 9 வயதிற்குள்ளாக மீசை வளர்ந்தும் ஆணுறுப்பு வளர்ச்சியடைந்தாலும், precocious puberty என்று கணக்கிடப்படும். இதுபோன்ற நிலை ஏற்படக் காரணம்? விரைவில் பாலியல் ஹார்மோன் வளர்ச்சியடைவது முதல் காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதேபோல, ஒரு குழந்தை விரைவில் பாலியல் உறவிற்குள் தள்ளப்பட்டால், முன்கூட்டியே பருவமடைதலைச் சந்திப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இதுபோன்று விரைவில் செக்ஸ் ஹார்மோன் வளர்ச்சியடையும் குழந்தைகளுக்கு எலும்புகளின் வளர்ச்சி தடைப்பட்டு, உயரம் குறைவாகவும் உணர்வுகள் விரைவில் முதிர்ச்சியடைவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், குழந்தை திருமணம் போன்றவையும் இதற்குக் காரணமாக அமைவதாகவும், மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. உலகில் எங்கோ ஒன்றோ, இரண்டோ நடப்பதாக நினைத்து நாம் கடந்து போக முடியாது. கொரோனா லாக்டவுன் நேரத்தில் உலக அளவில் 500 பெண் குழந்தைகளில் ஒரு பெண் குழந்தையும், 2000 ஆண் குழந்தைகளில் ஒரு குழந்தையும் முன் கூட்டியே பருவமடைந்ததாக ஆய்வுகள் குறிப்பிடுகிறது. லீனா எதனால், கருத்தரித்தார்? சிறுவத்திலேயே, லீனா பாலியல் உறவுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அதனால், முதல் மாதவிடாய் முன்கூட்டியே ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பாலியல் உறவிற்குத் தள்ளப்பட்டதால், 5 வயதில் லீனா கருத்தரித்துள்ளார். இந்த சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் கடந்தும் லீனாவை சிறுவயதில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபர் யார் என்ற விவரம் வெளிச்சத்திற்கு வரவில்லை. லீனாவிற்கு பிறந்த குழந்தை 1979-ம் ஆம் ஆண்டில் 40 வயதை அடைந்த போது, எலும்பு மஜ்ஜை நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். லீனாவிற்கு பல ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் மிக தாமதமாகவே வெளிச்சத்திற்கு வந்தது. அதுவும், அவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய பேட்டிக்குப் பின் பயாப்சி, எக்ரே மாதிரியான பரிசோதனைக்குப் பின்னர், அதை உறுதிப்படுத்தி வெளி உலகிற்கு அறிவித்தனர். அப்படி உலகின் இளம் வயது தாய் என்று அறிவிக்கப்பட்டார், லீனா மெடினா. லீனா மெடினா இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கேள்வி எழுகிறதா?… 89வயதைக் கடந்த லீனா, பெரு நாட்டில் வாழ்த்திக்கொண்டிருக்கிறார்.

Related Post