ஒல்லியாக வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு, இந்த ப்ரோக்கோலியை சாப்பிடலாம்.. அந்த அளவுக்கு நன்மை தரக்கூடியது இந்த உணவு.
முட்டைகோஸ், காலிஃப்ளவர் குடும்பத்தை சேர்ந்தது இந்த ப்ரோக்கோலி.. ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.. ஒரு கப் ப்ரோக்கோலியில், ஏ, பி 6, பி 2, ஈ வைட்டமின்களும், பாஸ்பரஸ், கோலைன், மாங்கனீசு, தாமிரம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
குறிப்பாக இந்த ப்ராக்கோலியில் நார்ச்சத்துக்கள் அதிகம், கெட்ட கொழுப்பினை குறைக்கும் சக்தி இந்த ப்ரோக்கோலிக்கு உண்டு.. அதனால்தான் உடல் மெலிய நினைப்பவர்களை, இதை கட்டாயம் சாப்பிட சொல்கிறார்கள்.
கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ஏற்படும்.. இதை சாப்பிட்டால் இடுப்பு மற்றும் தொடை பகுதியில் உள்ள கொழுப்பு தானாக கரைந்துவிடுமாம்.
கோளாறுகள்:
செரிமான கோளாறுகளை இந்த காய் சரிசெய்கிறது.ப்ரோக்கோலியில் உள்ள நார்ச்சத்து, வயிறு, குடல்களின் செரிமானத்திற்கு உதவுவதுடன், உணவுகள் எளிதாக ஜீரணமாக உதவுகிறது. இதனால், மலச்சிக்கல் ஏற்படாமலும் தடுக்கிறது. ப்ரோக்கோலி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் உடலில் இருந்து மெல்ல மெல்ல நீங்குகிறதாம்.
கால்சியம் அதிகமாக உள்ளதால், பல், எலும்புகளுக்கு வலு தருகிறது.. ப்ரோக்கோலி சாப்பிடுவதால், புற்றுநோய் வராமல் தடுக்கப்படுகிறது.. ப்ரோக்கோலியில் சல்போரபேன் என்ற வேதிப்பொருள் இருப்பதால், புற்று நோய்களின் செல்களின் அடிப்படை வளர்ச்சியை முற்றிலுமாக அழிக்கிறது. அத்துடன் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைப்பதாக சொல்கிறார்கள்.. நினைவுத் திறனையும் அதிகரிக்கும்.
இதய நோய்கள்: ப்ரோக்கோலியில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளதால், ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேரவிடாமல் தடுக்கிறது.. இதனால், இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமலும் தடுக்கப்பட்டுகிறது. நன்றாக சமைக்கப்பட்ட ப்ரோக்கோலி, இதய நோய்களை தடுப்பதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.
சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாத்து, தோல் சுருக்கம் ஏற்படாமலும் தடுக்கிறது.. ப்ரோக்கோலி சாப்பிடுவதால், இளமை தோற்றத்தை தரும். கண்களுக்கு நல்லது... முக்கியமாக, கண்களில் இருக்கும் மேகுலார் திசுக்களின் வளர்ச்சி குறைகிறது. இதைத்தவிர, கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற பிரச்சனைகளை அண்டவிடாமல் செய்யலாம்.
யார் சாப்பிடக்கூடாது: ஆனால், தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் இதை சாப்பிட வேண்டாம் என்கிறார்கள்.. காரணம், தைராய்டு உற்பத்திக்கு தேவையான அயோடின் சத்தை உறிஞ்சுவதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்கிறார்கள்.. நிறைய ப்ரோக்கோலி சாப்பிட்டால், வாயுத்தொல்லை ஏற்படும்.
மற்றபடி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய அற்புதமான உணவு இது. ப்ரோக்கோலியை மிக்சியில் அரைத்து, தேன் கலந்து, ஸ்மூத்தி தயார் செய்து குடிக்கலாம்.. ப்ரோக்கோலி தூளை பயன்படுத்தி, காபி போட்டு குடிக்கிறார்கள்..