சென்னை; மின்னணு சாதன துறையில் தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் 1 ஆக நீடித்து வருகிறது. நவம்பர் 2024 இல் தமிழ்நாடு $1.53 பில்லியன் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 8 மாதங்களுக்கு, ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான மாதங்களில் அதிக மின்னணு சாதனங்கள் ஏற்றுமதி செய்த முன்னணி மாநிலங்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
1. தமிழ்நாடு - $ 7.82 பில்லியன் (38%)
2. கர்நாடகா - $ 4.14 பில்லியன் (20%)
3. உத்தரப் பிரதேசம் - $3.46 பில்லியன் (17%)
மேற்கண்ட 3 மாநிலங்கள் மட்டுமே நமது மின்னணு ஏற்றுமதியில் 75% பங்கு வகிக்கின்றன. நடப்பு நிதியாண்டில் 11 பில்லியன் டாலர் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியுடன் தமிழ்நாடு நம்பர் 1 இடத்தில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பர் 1 தமிழ்நாடு; ஏற்கனவே 2023-24 நிதியாண்டில் 32.84% மொத்த பங்குடன் 9.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியில் தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த எண்ணிக்கை வெறும் 1.86 பில்லியனாக இருந்தது.
இந்த வருடம் இது 11 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியாக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கர்நாடக வெறும் 4.56 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதியை மட்டுமே மேற்கொண்டு உள்ளது.
மற்ற மாநிலங்களின் அளவு:
உத்தரப் பிரதேசம் - $3.92 பில்லியன்
மகாராஷ்டிரா - $2.81 பில்லியன்
குஜராத் - $2.38 பில்லியன்
டெல்லி - $1.40 பில்லியன்
ஹரியானா - $625.94 மில்லியன்
தெலுங்கானா - $564.81 மில்லியன்
தமிழ்நாடு சாதனை: தமிழ்நாடு ஏற்றுமதியின் எண்ணிக்கை இந்தியாவின் மொத்த மின்னணு ஏற்றுமதியில் 31% ஆகும். அதே காலகட்டத்தில் இந்தியாவில் மொத்தமாக செய்யப்பட்ட மின்னணு ஏற்றுமதியை $16.48 பில்லியன் ஆகும். ஏப்ரல்-அக்டோபர் மாதங்களில் மட்டும் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 90% சதவிகித மின்னணு ஏற்றுமதியை தமிழ்நாடு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இருந்து தமிழ்நாடு அதன் சாதனையை இந்த வருடம் முறியடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. கர்நாடகா ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. 2.56 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் மகாராஷ்டிரா நான்காவது இடத்தில் உள்ளது. 2.13 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் குஜாத் நான்காவது இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு மீண்டும் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமாக மாற உள்ளது. தொடர்ந்து இரண்டாவது வருடமாக இதில் தமிழ்நாடு முதல் இடத்தில் உள்ளது.
தமிழ்நாட்டின் 7.8 பில்லியன் டாலர் ஏற்றுமதியானதுதான் இந்தியாவில் தனி ஒரு மாநிலம் மேற்கொண்ட அதிகபட்ச ஏற்றுமதி ஆகும். 3.56 பில்லியன் டாலர் ஏற்றுமதியில் உத்தர பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஏற்றுமதி மதிப்பை விட இரு மடங்கு ஏற்றுமதியை தமிழ்நாடு மேற்கொண்டு உள்ளது. இதனால் உத்தர பிரதேசம் உட்பட எந்த மாநிலமும் எட்ட முடியாத உயரத்தில் தமிழ்நாடு உள்ளது.
ஐபோன் காரணம்; தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஐபோன் உற்பத்தி இதற்கு முக்கிய காரணம் ஆகும். டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்ப்ளி யூனிட்டை ஓசூரில் உள்ள புதிய தளத்தில் மேலும் விரிவுபடுத்த உள்ளது. ஏற்கனவே முன்மொழியப்பட்ட விரிவாக்கத்துடன் மேலும் விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
இங்கே கிட்டத்தட்ட 2 லட்சம் ஐபோன்களை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் இங்கே உருவாக்கப்படுகிறது. உலகிலேயே பெரிய ஐபோன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.
டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் மிகப் பெரிய ஐபோன் அசெம்ப்ளி ஆலையை ஓசூரில் டாடா உருவாக்க உள்ளது.
50,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த வருடம் சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங்களுக்கும் முக்கியமான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. முக்கியமாக பல மாவட்டங்களில் முதலீடுகள் செய்யப்படுவது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலினை கூகுள் நிறுவன அதிகாரிகள் விரைவில் சென்னையில் சந்திப்பார்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இனி மின்னணு சாதன துறையில் தமிழ்நாடு தொடர்ந்து நம்பர் 1 ஆக நீடிக்க போகிறது.