அதிமுகவை நோக்கி "அர்ஜுனரு வில்லு".. பெரிய பொறுப்போடு ஆதவை உள்ளே இழுக்க திட்டம்! காரணம் அவராமே!

post-img
சென்னை: அதிமுக உள்ளே ஆதவ் அர்ஜுனாவை இழுக்க காய் நகர்த்தப்பட்டு கொண்டு இருக்கிறதாம். எடப்பாடி பழனிசாமியும் கூட இதில் கொஞ்சம் ஆர்வமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி உள்ளார் ஆதவ் அர்ஜுனா. 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பின்பும் கூட அவர் பேசிய சில விஷயங்கள் சர்ச்சையானது. இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். அதன்படி, எளிய மக்கள் குறிப்பாக, 'சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும்' என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை. குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை. ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன்.இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல "அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்" என்கிற அடிப்பையில் 'சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும்' அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன். எனவே, என்னைப் பற்றிய தேவையற்ற விவாதங்கள் பொதுவெளியில் தொடராமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலிருந்து முழுமையாக என்னை விடுவித்துக்கொள்வது என்று முடிவெடுத்துள்ளேன், என்று கூறிவிட்டு ஆதவ் அர்ஜுனா கட்சியில் இருந்து வெளியேறி உள்ளார். லாபி: இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனாவை உள்ளே இழுக்க அதிமுகவில் ஒரு லாபி நடந்துகொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுகவில் இரண்டாம் கட்ட தலைவராக அவர் பொறுப்பு வழங்கினால்.. அதிமுகவை அடுத்த தேர்தலிலேயே வெற்றிபெற வைக்க முடியும் என்று முக்கியமான நிர்வாகி ஒருவர் அவருக்கு ஆதரவாக பேசி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை செய்ய எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டு இருக்கிறாராம். அதன்படி பிரஷாந்த் கிஷோரிடம் பேசுவதற்கு முயன்று கொண்டு இருக்கிறாராம். அவரை வைத்து 2026 தேர்தல் பணிகளை செய்யும் திட்டத்தில் எடப்பாடி உள்ளாராம். இவரை உள்ளே இழுக்கவே பிரஷாந்த் கிஷோரை உள்ளே கொண்டு வர வேண்டும் என்ற காரணத்திற்காகவே என்கிறார்கள். இதற்கு ஆதவ் அர்ஜுனா உள்ளே வந்தால் சரியாக இருக்கும் என்று எடப்பாடி பழனிச்சாமியும் நினைக்கிறாராம். தேர்தல் பணிகளையும் செய்ய அவரின் நிதி கிடைக்கும் என்று நினைக்கிறாராம். ஆனால் கட்சியில் முக்கிய பொறுப்பு அல்லது இரண்டாம் கட்ட பொறுப்பை பெற ஆதவ் அர்ஜுனாவிற்காக லாபி செய்யும் தரப்பு கண்டிஷன் போடுவதாக கூறப்படுகிறது. இதை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கட்சியில் இரண்டாம் கட்டமாக ஒரு பவர் சர்க்கிள் வருவதை எடப்பாடி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வேறு ஒரு பெரிய பொறுப்பு அல்லது வாக்குறுதியோடு உள்ளே இழுக்க ஆதவிடம் பேச்சுவார்த்தைகள் நடக்கலாம் என்கிறார்கள்.

Related Post