சென்னை: விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பல வருடங்கள் கழித்து விஜே பாவனா மீண்டும் தொகுப்பாளராக வந்திருக்கிறார்.
கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக விஜய் டிவியை விட்டு விலகி இருக்கும் பாவனா சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 பைனல் ரவுண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்திருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியை இதுவரைக்கும் பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த நிலையில் இப்போது மீண்டும் பாவனா வந்திருப்பதால் பிரியங்கா இந்த நிகழ்ச்சியை விட்டு விலகி விட்டாரா? என்ற கேள்விகள் எழுகிறது.
இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் இப்போது வரைக்கும் ஜூனியர் 9 சீசன் வரை மாகாபா ஆனந்த் மற்றும் விஜே பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார். இவர்கள் இருவரின் காம்போவிற்க்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. ஆனால் பிரியங்காவிற்கு முன்பு மாகாவோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது விஜே பாவானா தான். பிறகு இடையில் பாவனா ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலில் கிரிக்கெட் வர்ணனையாளராக மாறி இருந்தார்.
இதனால் கடந்த ஆறு வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பாவனா வரவில்லை. அதே நேரத்தில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் போல பிரபலமாகவே பாவனா இருந்து வந்தார். அடிக்கடி போட்டோ சூட் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார். அப்போது அவரிடம் நீங்கள் எப்போதும் மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு வருவீர்கள் என்று பலர் கேள்வி எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ப்ரீ இறுதிசுற்று நடக்க இருக்கும் நிலையில் பிரியங்காவிற்கு பதில் இந்த வாரம் விஜே பாவனா தொகுத்து வழங்கி இருக்கிறார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. இது பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. அதே நேரத்தில் இனி பிரியங்காவிற்கு பதிலாக பாவனா தான் தொடர்வாரா என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.