சென்னை: சென்னை சூளைமேடு போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆகாஷ், கோகுல் ஆகியோர் கைதாகினார்கள். அவர்களின் செல்போனில் மயிலாப்பூரைச் சேர்ந்த ஒருவருடன் 20000 பணப்பரிமாற்றம் நடந்திருந்தது. அவர் கூறிய தகவலின்படி மயிலாப்பூர் வாசனை திரவிய கடையில் சோதனை நடத்திய போது, 30 லட்சம் பணம் மற்றும் தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபற்றி பார்ப்போம்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்பனை செய்ததாக ஆகாஷ் மற்றும் கோகுல் ஆகியோரை, 2 நாட்களுக்கு முன்பு, சென்னை சூளைமேடு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்தபோது, ஆகாஷ் தனது ஜி-பே மூலம் மயிலாப்பூரைச் சேர்ந்த அசோக் என்பவருக்கு ரூ.20 ஆயிரம் அனுப்பியதை கண்டுபிடித்தனர். அதன்பேரில், மயிலாப்பூரில் பறவைகள் மற்றும் நாய்குட்டிகளை விற்பனை செய்து வரும் அசோக் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
சென்னை சூளைமேடு போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆகாஷ், கோகுல் ஆகிய இரு வாலிபர்களை கைது செய்தனர். அவர்களில், ஆகாஷின் செல்போனை ஆய்வு செய்தபோது, ஒரு நபருக்கு ரூ.20 ஆயிரம் பண பரிமாற்றம் செய்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பறவைகள் மற்றும் நாய்க்குட்டிகள் வாங்கி விற்பனை செய்து வரும் அந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அந்த விசாரணையில் ஹவாலா பணத்தை கைமாற்றும் புரோக்கர்களுடன் அசோக்கிற்கு நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், அசோக் அவருடைய தாய் சுதா (52), லண்டனில் வசித்து வரும் ரிஜிஸ் என்பவரது, சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள வீட்டில் வேலை செய்து வருவது தெரியவந்தது. அப்படி வேலை செய்யும் சுதா, தனது முதலாளி அம்மா ரிஜிஸ் உத்தரவுப்படி பல்வேறு நபர்களிடம் இருந்து சுதாவின் மகன் அசோக் ஜி-பே எண்ணிற்கு பணம் அனுப்பப்படுவது விசாரணையில் தெரியவந்தது.
அந்த பணத்தை அசோக், மயிலாப்பூர் மாதவ பொருமாள் கோயில் தெருவில் வசித்து வரும் அகமது ஷா (48) மற்றும் அவரது சகோதரன் முகமது கலிமுல்லா (45) ஆகியோரில் ஒருவரிடம் பணத்தை கொடுத்தது தெரியவந்தது. பணத்தை பெற்று வந்த அகமது ஷா மற்றம் முகமது கலிமுல்லா ஆகியோர் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் வாசனை திரவம் விற்பனை கடை நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து, தனிப்படை போலீசார் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள வாசனை திரவிய வியாபாரிகளின் கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அகமது ஷா மற்றும் முகமது கலிமுல்லா ஆகிய வியாபாரிகள் வீடு மற்றும் கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.அதில் கணக்கில் வராத ரூ.30 லட்சத்து 77 ஆயிரம் பணமும், 140 கிராம் தங்க கட்டிகளும் சோதனையில் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து சகோதரர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் சகோதரர்கள் இருவருக்கும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்த பணத்தில் ஒரு பகுதி இந்த பணம் என்றும், தொழில் வளர்ச்சிக்காக இந்த பணத்தை கடையில் வைத்திருந்ததாக கூறினார்கள். இருந்தாலும் சூளைமேடு போலீசார் வருமான வரித்துறை அதிகாரிகள் உதவியுடன் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.30.77 லட்சம் ரொக்கம் மற்றும் 140 கிராம் தங்க கட்டிகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.