திருப்பதி: நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பால் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் வரும் 3 மாதங்களுக்கு திருப்பதி கோவில் தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பணக்கார கடவுளாக திருப்பதி ஏழுமலையான் இருக்கிறார். ஆந்திர மாநிலம் திருப்பதி சென்று வந்தால் வாழ்வில் திருப்பம் ஏற்படும் எனக்கூறுவது உண்டு. திருப்பதி ஏழுமழையான் கோவிலை வைத்து தான் இப்படி சொல்கின்றனர்.
ஆந்திராவில் மே 13ம் தேதி சட்டசபை தேர்தல்.. ஒடிசா உள்பட மேலும் 3 மாநிலங்களுக்கும் தேர்தல் அறிவிப்பு இந்த கோவிலுக்கு ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருப்பதி ஏழுலையான் கோவிலுக்கு வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் தான் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பால் நேற்று முதல் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் தான் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரிசனத்தில் மாற்றங்கள் செய்துள்ளது. அதன்படி விஐபி தரிசனத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுவாக விஐபி தரிசனத்தில் பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படும். ஆனால் இப்போது நடத்தை விதி அமலில் இருப்பதால் பரிந்துரை கடிதங்கள் என்பது ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் போட்டி.. தெலுங்கு தேசம் + பாஜக கூட்டணியில் வேட்பாளராகிறார்.. வெல்வரா? மேலும் பரிந்துரை கடிதங்கள் மூலம் கோவிலில் தங்கும் வசதி கொடுக்கப்படும். ஆனால் இனி அந்த வசதி ஏற்படுத்தி தரப்படாது. இருப்பினும் உயர்அதிகாரிகளுக்கு மட்டுமே அவர்களின் பொறுப்புக்கு ஏற்க சலுகைகள் அளிக்கப்படும். மாறாக பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படாது. இந்த கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் ஜுன் மாதம் வரை இந்த நடைமுறைகள் பின்பற்றப்படும் என திருப்பதி கோவிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருப்பதி கோவில் ஆந்திராவில் அமைந்துள்ளது. ஆந்திராவை பொறுத்தமட்டில் லோக்சபா தேர்தல் மற்றும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தல் என்பது ஒன்றாக நடைபெற உள்ளது. ஆந்திரா சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் வரும் ஜுன் 11ம் தேதி முடிவடையும் நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே மாதம் 13ம் தேதி ஒரே நாளில் ஆந்திரா சட்டசபை மற்றும் ஆந்திரா லோக்சபா தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
முன்னதாக சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 18ம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனு செய்ய மார்ச் 25 கடைசி நாளாகும். மனு மீதான பரிசீலனை என்பது ஏப்ரல் 26ல் நடக்கும். வேட்பு மனு மனு வாபஸ் பெற ஏப்ரல் 26ம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் என்பது மே மாதம் 13ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தல்களில் மீண்டும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. மாறாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா மற்றும் பாஜக கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்கி உள்ளன. இப்படி சட்டசபை, லோக்சபா தேர்தல் ஒன்றாக நடைபெற உள்ளதால் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.