அமைச்சர் செந்தில் பாலாஜி-3 மனுக்கள் மீது சற்று நேரத்தில் நீதிமன்றம் உத்தரவு

post-img

நேற்று முன்தினம் காலை அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடத்தினர். சுமார் 17 மணி நேரம் நடைபெற்ற இந்த ரெய்டு நேற்று அதிகாலையில் முடிவடைந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து காரில் அழைத்து சென்றனர். அப்போது செந்தில் பாலாஜிக்கு எதிர்பாராத விதமாக நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது.

அவர் நெஞ்சு வலியில் கதற, அதிகாரிகள் உடனடியாக அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து உடனடியாக அமைச்சர்கள் சேகர்பாபு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜி கைது தொடர்பான வழக்கில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனைக்கே செந்தில் பாலாஜியை சந்தித்தார்.

Senthil Balaji's interim bail petition adjourned till Thursday

இதனையடுத்து அவரை 2 வாரக்காலம் அதாவது வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரியும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருக்கும் அவரை காவேரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யவும் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல அமலாக்கத்துறை சார்பில், செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இன்று இந்த 3 மனுக்கள் மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது. முன்னதாக நேற்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையில், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான என்.ஆர்.இளங்கோவும், அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசனும், அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷும் ஆஜராகி வாதிட்டனர். இதனையடுத்து இந்த வழக்குகள் மீதான உத்தரவு 15ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கிறது.


Related Post