சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் வெள்ளத்தில் நின்று போட்டோ எடுப்பது, சம்பிரதாயத்திற்கு ட்வீட் போடுவது தனக்கு தெரியாது என பேசியிருந்தார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய். இந்நிலையில் திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, விஜய் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் நாக் கூசும் வார்த்தைகளால் வசைபாடிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
பரபரப்பு, ஆபாச பேச்சுகளால் சற்று பிரபலமான திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் சர்ச்சை வளையத்திற்குள் வந்திருக்கிறார். ஏற்கனவே பாஜவில் உள்ள நடிகை குஷ்பு, ராதிகா சரத்குமார் பற்றிய பேச்சால் விமர்சனத்திற்கு ஆளானார்.
ஆளுநர் ரவி, பாஜகவில் உள்ள நடிகைகள் குறித்து திமுக மேடைகளில் அவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கடும் கண்டனங்களை பெற்று தந்தது. இதையடுத்தே கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
திமுக பேச்சாளராக இருக்கும் அவர் மேடைப் பேச்சுகளின் போது மிகவும் ஆபாசமாக பேசுவதையும் கெட்ட வார்த்தைகளை உபயோகித்து பேசுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர்களை மிகக் கடுமையாக விமர்சிக்கும் வழக்கத்தை கொண்டவர். மேலும் பெண் தலைவர்களை பற்றி பேசும்போது கடுமையாகவும் ஆபாசமான கருத்துக்களை கொண்டும் விமர்சித்து வந்தார்.
இதை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் புகார் கொடுத்தனர். விவகாரம் பெரிதானதை அடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதோடு காவல் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் 60 நாள் சிறைவாசத்திற்கு பிறகு மீண்டும் வெளிவந்த அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தான் பேசியது தவறு என வருத்தம் தெரிவித்ததோடு மீண்டும் கட்சியில் சேர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டார். மேலும், சமீபத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இரண்டு மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத்குமார் கூறியதை வைத்து ஆபாசமாகவும் கொச்சையாகவும் சில கருத்துக்களை பேசியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது ட்விட்டரிலும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அதனை ராதிகா சரத்குமாரும், நடிகையுமான குஷ்பூவும் பதிலடி கொடுத்திருந்தனர். இந்நிலையில் திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, விஜய் குறித்தும் அவரது குடும்பத்தினர் குறித்தும் நாக் கூசும் வார்த்தைகளால் வசைபாட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள வீடியோவில் பேசியுள்ள அவர்," வெள்ளத்தில் நாங்கள் அவ்வளவு சிரமப்பட்டோம். நாங்க கொஞ்ச நஞ்ச சிரமப்பட்டோம். நாங்க என்ன வெள்ளத்துல நின்னு போட்டோ எடுக்குறோமா? சம்பிரதாயத்துக்கு ட்விட்டு போடுறோமா.. சம்பிரதாயத்துக்கு அறிக்கை விடுறோமா? முட்டாளே உன் பொண்டாட்டிக்கு இந்த தமிழ்நாட்டில் ஓட்டு இருக்காடா *** ***.. உன் மவனுக்கு ஓட்டு இருக்கா..
நீ நடிகனா இருக்கும் போது உங்க அப்பா, அம்மாவுக்கு சோறு போட்டியா? அதுக்கு வக்கில்லை நீ யாரை பேசுற.. அன்றைக்கே டிகேஎஸ் இளங்கோவன், ஆர்எஸ் பாரதி என்னை பேசவிடாமல் தடுத்து விட்டனர். இனி நம்மை பத்தி பேசவே கூடாது. அப்படியே நசுக்கிடனும். படத்திலேயே மனைவியை காப்பாத்த முடியாமல் காட்சி வச்ச நீ.. தமிழ்நாட்டை எப்படி காப்பாத்துவ" என கடுமையாகப் பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்து வருகிறது.