புத்தாண்டு பலன் 2025: கன்னி ராசிக்கு பணமழை கொட்டப் போகுது.. ஆனா இதில் மட்டும் கவனமாக இருங்க

post-img

புத்தாண்டு பலன் 2025: புத்தாண்டு பிறக்க இன்னும் 21 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்தப் புத்தாண்டிலாவது மாற்றங்கள் உண்டாகாதா என காத்துக் கொண்டிருந்த கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் பண மழை கொட்டப் போகிறது. பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் விடை கிடைக்கப் போகிறது. 2025 இல் கன்னி ராசி என்னென்ன நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். எதில் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்... (2025 for kanni)
கடந்த 8 மாதங்களாக ராசி, லக்னத்தில் கேது பயணிப்பதால் அஷ்தத்தில் தான் உள்ளது. ராகு கேது உத்திரத்தை தாண்டி வெளியில் போகும்போது உங்களுக்கு சாப விமோச்சனம் உண்டாகும். 2025 இல் ராசி மற்றும் லக்னத்தில் இருந்து கேது கிளம்பி விரைய ஸ்தானத்துக்கு போவதால் அமோகமான மாற்றத்தைக் காணப் போகிறீர்கள். இதுவரை மற்றவர்களிடம் தவறுகளைக் கண்டுகொண்டே இருந்திருப்பீர்கள். (Puthandu palan for kanni)

பொதுவாகவே கன்னி ராசிக்காரர்கள் பர்ஃபெக்டாக இருக்கக்கூடியவர்கள். எதிரிகள் மற்றும் மூத்தவர்களின் தொல்லைகள், உடல்நல பாதிப்பு உங்களுக்கு இருந்திருக்கும். கடந்த 8 மாதங்கள் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு தடை ஏற்பட்டிருந்திருக்கும். தற்கொலை எண்ணங்கள் கூட வந்திருக்கும். ராகு கேது பெயர்ச்சி அடைவதால் விரக்தியில் இருந்து வெளி வருவீர்கள். நினைத்த காரியங்கள் நடக்கும். கனவுகள் நிறைவேறப் போகிற வருடமாக அமையும்.
குடும்பம் ஒன்று சேரும், காதல் வாழ்க்கை அமோகமாக இருக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். சனியின் மாற்றம் வியாபாரத்தில் விருக்தியை உண்டாக்கும். கணவன், மனைவிக்குள் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். வெளிநபர்களை வீட்டுக்குள் அனுமதிப்பதைத் தவிர்ப்பது நல்லது. வியாபாரம், தொழில் புதிதாக ஆரம்பிப்பீர்கள். இருக்கின்ற வேலையை வேண்டாம் என்று கூறுவீர்கள். வேலை போகக்கூடிய பிராப்தமும் உள்ளது. (new year rasi palan for kanni)
கன்னி ராசிக்காரர்கள் பெண்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் காலமாக இருக்கும். வியாபாரத்தில் சிறந்து விளங்குவீர்கள். தொட்டது அனைத்தும் துலங்கும். வியாபாரத்தில் முக்கியமான மாற்றங்கள் உண்டாகும். கன்சல்டிங், ஆடிட்டிங், வழக்கறிஞர்கள் தொழில் சூப்பராக இருக்கும். வேலையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

வேலை, பொருளாதாரத்தில் இதுபோன்ற விஷயங்களால் எந்தவொரு பிரச்னையும் உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படாது. குரு பார்வை ராசி லக்னத்தில் இருந்து இரண்டாம் இடம் எனும் தனம், குடும்பம், வாக்கு ஸ்தானத்தில் துலாமில் விழுவதால் காசு, பணத்திற்குப் பஞ்சம் இருக்காது. பண வரவு உண்டாகும். மக்களுடைய ஆதரவு பெருகும். குழந்தைகளின் சந்தோஷம் அதிகரிக்கும்.
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். ஆனால், உங்களுடைய வேலையினால் பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படும் என்று சொல்ல முடியாது. மல்டிலெவல் மார்க்கெட்டிங், தொழில், வியாபாரம் செய்வர்களுக்கு அனைத்து அனுகூலங்களும் உண்டாகும். ரணம், ரோகம், சத்ரு ஸ்தானம் சொல்லக்கூடிய அனைத்தையுமே முடிக்கக் கூடியது ராகு கேது.
ராகு கேது பெயர்ச்சிக்குப் பின்னர் உங்களை அடிச்சுக்க ஆளே இருக்காது. கெடு கிரகங்கள் மறைவு இடங்களில் இருக்கும்போது பவர்ஃபுல்லாக இருக்கும். சண்டை வந்தாலும் பிரச்னைகளை தீர்ப்பீர்கள். அதில் வெற்றி காண்பீர்கள். தொழில் ஸ்தானம் அபிவிருத்தி அடையும். படிப்பு, உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும்.

குடும்பத்தில் கெளரவம் பிறக்கும். வங்கி துறையில் பணிபுரிபவர்களுக்கு ஏற்றம் உண்டாகும். பிளான் செய்து அனைத்து பணிகளையும் முடிப்பீர்கள். வீடு வாங்கும் யோகம் உள்ளது. நல்ல மாற்றங்கள் உண்டாகும். வேலையை மட்டும் நன்றாக பார்த்துக் கொண்டால் போதும்.
உத்திர நட்சத்திரக்காரர்கள் பலவிதமான கஷ்டங்களில் இருந்து வெளிவருவீர்கள். முடி கொட்டுவது, தலை பிரச்னை, கண் பிரச்னை, துரோகம் நடப்பது போன்றவை மாறும். பெரியவர்களின் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும். விரைய ஸ்தானத்துக்கு போய் 12 ஆம் இடத்தில் உட்காருவதால் உத்திர நட்சத்திக்காரர்கள் வெளியூர் செல்லும் வாய்ப்பு உள்ளது. இதனால், தூக்கம் கெடுவதற்கான வாய்ப்புள்ளது.
அஸ்த நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல காரியங்கள் நடக்கும்போதெல்லாம் எதாவது ஒரு பிரச்னை ஏற்படும். இதெல்லாம் உங்களுக்கு மொத்தமாக மாறும். உங்களால் முடியும் போதெல்லாம் திருப்பதி சென்று வருவது நல்லது. பச்சரிசி தானம் செய்வது நன்மை பயக்கும்.
பெண்களுக்கு, வியாபாரிகளுக்கு அமோகமாக ஆண்டாக இருக்கும். உத்திரம், அஸ்தம் நட்சத்திரக்காரர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். சித்திரை நட்சத்திரக்காரர்கள் நீட், ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் நல்ல மாற்றம் கிடைக்கும். நல்ல துறைகளில் உயர்ந்த பதவிகளைப் பெறுவீர்கள். 2025 ஜூலை, ஆகஸ்டில் கவனமாக இருக்க வேண்டும். 100க்கு 70 சதவீதம் அமோகமான ஆண்டாக கன்னி ராசிக்காரர்களுக்கு அமையும்.

Related Post