ஆளுநர் ரவி செயல்படவே இல்லை! உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சுளீர்..

post-img

சென்னை: ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு நவ.10ல் விசாரணை செய்யப்படும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தில் நவம்பர் 10ம் தேதி விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளதால் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 30ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
மசோதாவில் என்ன இருக்கிறது?: அரசு அனுப்பும் மசோதாக்கள், உத்தரவுகளுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போடுவதாகவும் குற்றச்சாட்டு வைத்து உள்ளது. ஆளுநர் ஆர். என் ரவி மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என் ரவியின் செயல்பாட்டிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது. தமிழ்நாடு அரசின் மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக வழக்கு தொடுத்துள்ளது. ஆளுநருக்கு உடனே உத்தரவிடக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.


தமிழக சட்ட சபை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் தாமதம் உள்ளது.. இதை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உத்தரவிடக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது.
மனுவில் என்ன இருக்கிறது?: தமிழ்நாடு ஆளுநர் செயலற்றவராக இருக்கிறார், ஆளுநர் ரவியின் செயல்பட்டால் பெரும் அரசியலமைப்பு சிக்கல் ஏற்பட்டுவிட்டது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவில் குற்றஞ்சாட்டி உள்ளது. அதில், ஆளுநர் ரவி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார். ஆளுநர் ரவி மக்கள் தீர்ப்பை விளையாட்டு பொருளாக நினைத்து செயல்படுகிறார்.


தமிழ்நாடு மக்களின் உரிமைகளை தமிழ்நாடு ஆளுநர் பறிக்கிறார். மக்கள் தேர்வு செய்த அரசை செயல்பட விடாமல் தடுக்கிறார். முன்னாள் அமைச்சர்கள் ஊழல் விவகாரங்களில் விசாரணையை தொடர்வதில் குறுக்கே நிற்கிறார்
தினசரி ஆவணங்கள், பணி நியமன ஆணைகள், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆகியவற்றில் ஆளுநர் கையொப்பமிடாமல், குறுக்கே நிற்கிறார். அதேபோல் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு மாற்றுவது உள்ளிட்ட ஊழல் வழக்குகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் குறுக்கே நிற்கிறார்.
அவர் அரசு நிர்வாகத்துடன் ஒத்துழைக்காததால் ஒட்டுமொத்த நிர்வாகமும் முடங்கி உள்ளது. அவரின் செயல் மக்கள், அரசு விரோத மனப்பான்மையை உருவாக்குகிறது. டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன பரிந்துரையை முறையான விளக்கமின்றி ஆளுநர் நிராகரித்திருக்கிறார்.
தனது அதிகாரத்தையும், பொறுப்பையும் மதிக்காமல் அவர் துஷ்பிரயோகம் செய்கிறார். மக்களின் அத்தியவாசிய தேவைக்கு உண்டான சட்டங்களில் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளார், என்று தமிழ்நாடு அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


புகார் மேல் புகார்: சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில், சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியலமைப்பின் 200 வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர்கள் பரிசீலிப்பதற்கான கால வரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதல்களை வகுக்க வேண்டும். ஆளுநர்களுக்கு என்று குறிப்பிட்ட காலக்கெடு விதிக்க வேண்டும் என்று உத்தரவிடுமாறு தமிழ்நாடு அரசு இந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.

 

மசோதா நிலுவை: கிட்டத்தட்ட 20 சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 2020 ஜனவரி 13, 18-ம் தேதிகளில், தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடைப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்டத் திருத்த மசோதக்கள் அனுப்பப்பட்டு, நிலுவையில் உள்ளன.
2022 ஜனவரி 12ஆம் தேதி அனுப்பப்பட்ட, தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா நிலுவையில் உள்ளது. இதை எல்லாம் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்துள்ளது.

 

Related Post