மஹியை அரசியலுக்கு அழைக்கும் மகேந்திரா! வைரலாகும் ட்வீட்

post-img

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான ஆனந்த் மகேந்திரா சமூக வலைத்தளங்களில் அக்டிவாக இருப்பவர். தொடர்ந்து தனித்துவமான, வித்தியசமான கருத்துக்களை அவர் ட்விட்டரில் பகிர்ந்து வருவதால் அதற்கு நெட்டிசன்கள் மத்தியில் தனி கவனம் இருக்கும்.

 

இந்நிலையில், அவர் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி குறித்து கூறிய கருத்து டிரெண்டாகி வருகிறது. அண்மையில் நடந்து ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. கோப்பை வென்ற தோனிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

 

அதன்படி, தோனிக்கு பாராட்டு தெரிவித்த என மகேந்திர குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா, தோனி எதிர்காலத்தில் அரசியலுக்கு வர வேண்டும் என்றுள்ளார். தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ரசிகர்களின் அன்புக்காக ஐபிஎல்-லின் அடுத்த சீசனில் விளையாட விரும்புவதாக கூறிய தோனியின் முடிவு தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். எனினும் தோனி அரசியலில் களம் காண வேண்டுமென தான் விரும்புவதாக ஆனந்த் மகேந்திரா கூறியுள்ளார்.

 

Like most people, I was pleased to hear that #MSDhoni might stay on for another year in the #IPL. But I would not hope for longer, since I believe he needs to consider rhe political arena. I worked with him on the NCC review panel chaired by @PandaJay & saw that his intellectual… https://t.co/4uuhWIGFAt

 

— anand mahindra (@anandmahindra) May 30, 2023

ஜெய் பாண்டா தலைமையிலான தேசிய மாணவர் படைக்கான ஆய்வுக் குழுவில், தோனியுடன் தான் பணியாற்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவரது சுறுசுறுப்பான செயல்பாடுகள் தற்போதும் களத்தில் வெளிப்பட்டதாகக் கூறிய ஆனந்த் மகேந்திரா, வெளிப்படையாக பார்த்தால்  தோனி ஒரு எதிர்காலத் தலைவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Post