பயங்கர ஷாக்.. உத்தர பிரதேசத்தில் பிளாட்பாரத்தில் ஏறி தடம்புரண்ட மின்சார ரயில்..

post-img

லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் மின்சார ரயில் நேற்று இரவு திடீரென்று தடம்புரண்டது. ரயில் என்ஜின் பிளாட்பாரம் மீது ஏறி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தர பிரதேச மாநிலம் சாகுர் பாஸ்தி ரயில் நிலையத்தில் இருந்துமின்சார ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் நேற்று இரவு 10.49 மணிக்கு மதுரா ரயில் நிலையம் சென்றது.
அப்போது திடீரென்று என்ஜின் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ரயில் தடம் புரண்டது. திடீரென்று ரயில் என்ஜின் தண்டவாளத்தில் இருந்து வெளியேறி பிளாட்பார்ம் மீது ஏறி நின்றது.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏறப்ட்டது. இதையடுத்து ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் வேகமாக ரயிலில் இருந்து இறங்கினர். மேலும் ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அதிர்ஷ்டவசமாக ரயில் என்ஜின் தடம் புரண்டது எப்படி? என்பது தெரியவில்லை. அதோடு அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதையடுத்து ரயில் என்ஜின் பிளாட்பாரத்தில் இருந்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இது பற்றி மதுரா ரயில் நிலையத்தின் இயக்கனர் ஸ்ரீவத்சவா கூறுகையில், ‛‛ரயிலில் இருந்து அனைத்து பயணிகளுக்கும் இறக்கிவிடப்பட்டுள்ளது. உயிர்சேதம் எதுவும் இல்லை. ரயில் விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தி வருகிறோம்'' என்றார்.
இந்த சம்பவம் நேற்று இரவு மதுரா ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Post