அஸ்வின் புறக்கணிப்பு, டெஸ்ட் சறுக்கலை விடுங்க.. ரோஹித்தை வேறு மேட்டருக்காக தாளிக்கும் நெட்டிசன்ஸ்

post-img
நியூயார்க்: இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் சரிவு.. அஸ்வினுக்கு ஃபேர்வெல் கொடுக்காதது உள்ளிட்ட பல காரணங்களால் ரோஹித் சர்மாவை ஏற்கனவே விமர்சனம் செய்து வருகின்றனர். இது போக வேறு ஒரு விஷயத்திற்காகவும் நெட்டிசன்கள் ரோஹித் சர்மாவை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டிக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார். ஒரு தொடருக்கு இடையே அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று மூன்றாவது டெஸ்ட் டிராவில் முடிந்தவுடன், செய்தியாளர்களிடம் பேசுவதற்கு கேப்டன் ரோஹித் சர்மாவுடன் வந்தபோது, 38 வயதான அஸ்வின் இந்த அறிவிப்பை வெளியிட்டார். டெஸ்ட் போட்டிகளில் நாட்டின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அஸ்வின் டெஸ்ட் உள்ளிட்ட அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.. 38 வயதான அஸ்வின், பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியை இந்தியா டிரா செய்த சிறிது நேரத்திலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டார். அஸ்வினுக்கு இந்த தொடரில் ஆட வாய்ப்பே வழங்காமல்.. அதிலும் முறையாக ஃபேர்வெல் கூட தராமல் போனது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இன்று ஆட்டத்திற்கு பின் அஸ்வினை கோலி கட்டிபிடித்தார். அதை தாண்டி அஸ்வினுக்கு பெரிய ஃபேர்வெல் வழங்கப்படவில்லை. ரோஹித் சர்மாவின் இந்த செயல் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. அதேபோல் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் அவரின் மோசமான கேப்டன்சி காரணமாக ரோஹித் சர்மா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இது போக வேறு ஒரு விஷயத்திற்காகவும் நெட்டிசன்கள் ரோஹித் சர்மாவை விமர்சனம் செய்து வருகின்றனர். அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இன்று வரலாறு காணாத அளவுக்கு சரிந்து, முதல் முறையாக ரூ.85ஐ தாண்டி உள்ளது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் முக்கிய வட்டி விகிதங்களை 25 bps குறைத்து உள்ளது. 2025 இல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் முக்கிய வட்டி விகிதங்களை மேலும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மிக மோசமாக சரிய தொடங்கி உள்ளது. .@ImRo45 இப்ப எதுனா பேசுடா.... https://t.co/WlZTCxfrCC pic.twitter.com/lg5kJRPccy ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் 85.0650 ஆக சரிந்தது, நேற்று இந்த மதிப்பு 84.9525 ஆக இருந்தது. ரூபாயின் மதிப்பு சரிவின் வேகம் சமீபகாலமாக அதிகரித்தது. ரூ.84ல் இருந்து ரூ.85க்கு இரண்டு மாதங்களில் சரிந்துள்ளது. இதற்கு மாறாக, ரூ.83ல் இருந்து ரூ.84க்கு சரிய 14 மாதங்கள் ஆகும். மேலும் ரூ.82ல் இருந்து ரூ.83ஆக வீழ்ச்சியடைய 10 மாதங்கள் ஆனது. வரும் நாட்களில் ரூபாய் மதிப்பு மேலும் சரியும் வாய்ப்புகள் உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸ் ஆட்சியின் போது ரூபாய் மதிப்பு டாலருக்கு நிகராக 64.18 ஆக சரிந்த நிலையில் அதை ரோஹித் சர்மா கிண்டல் செய்து இருந்தார். இப்படியே போனால் வேறு நாட்டிற்குத்தான் செல்ல வேண்டும் என்பதை கிண்டல் செய்து பதிவு செய்து இருந்தார். இப்போது ரூபாயின் மதிப்பு அதள பாதாளத்திற்கு சென்றுள்ளது. இப்போது அதை பற்றி ரோஹித் சர்மா எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதை வைத்து நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Related Post