சென்னை: மீன் என்றாலே உடலுக்கு நன்மை தரக்கூடியது என்றாலும், மீன்களிலேயே, எந்த மீன் உடலுக்கு மிகவும் நல்லது? ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள் என்னென்ன? ஒமேகா 3 அமிலங்களின் நன்மைகள் என்னென்ன?
நம்முடைய உடலுக்கு இன்றியமையாத ஒரு ஊட்டச்சத்தாக திகழ்வதுதான், ஒமேகா 3 கொழுப்பு அமிலமாகும்.. இந்த ஒமேகா-3 நம்முடைய உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்துக்கும் பெரிதும் துணைபுரிகிறது. முக்கியமாக, நம் உடலில் ரத்தம் உறையாமல் பார்த்துக்கொள்கிறது.
இதயம், மூளை போன்றவற்றின் ஆரோக்கியத்துக்கும், மூட்டு வலியால் அவதிப்படுவோருக்கும் இந்தக் கொழுப்பு அமிலம் ஒரு சிறந்த நிவாரணியாக உள்ளது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனச்சோர்விலிருந்து பாதுகாக்கின்றன என்று சமீபத்திய ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது.. ஒமேகா-3 ஃபேட்டி அமிலத்தை அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது, மக்கள் மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறைகிறதாம்.
மீன் எண்ணெய்: மீன் எண்ணெய் மற்றும் மீன் மாத்திரைகள் இந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலத்திலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. கண், காது சம்பந்தமான பிரச்னைகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் ஒமேகா 3 உள்ளது.. அதனால்தான், இந்த மீன்களுக்கு எப்போதுமே மக்களிடம் வரவேற்பு உள்ளது.
கடல், ஆறு, குளம், ஏரி, பண்ணைகள் என பல்வேறு இடங்களில் மீன்கள் வளர்வதால், அதன் சத்துக்கள் மாறுபடுமா? என்று பலருக்கு சந்தேகம் உண்டு.. ஆனால், நீர்நிலைகள்தான் மாறுபடுகிறதே தவிர, மீன்களின் சத்துக்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்குமாம்.. ஆறு, குளம், ஏரிகளில் வளரும் மீன்கள் புழு, பூச்சிகளையும், கடலில் வளரும் மீன்கள், கடல்பாசிகளையும் சாப்பிடுகின்றன..
மீன் கழுவுறீங்களா? மீனை வாங்கினால் இந்த 7 விஷயத்தையும் தவறிகூட செய்யாதீங்க.. ரொம்ப ரொம்ப கவனம் மக்களே
சிறிய மீன்கள்: இயல்பாகவே, கடல்பாசிகளில் நிறைய ஒமேகா3 சத்தும், புரதச்சத்தும் உள்ளன.. இந்த கடல்பாசியை உண்ணும் மீன்களுக்கும் ஒமேகா3 அதிகமாகவே கிடைக்கிறது. அதிலும், சிறிய மீன்களில் நிறைய ஒமேகா3 இருக்கிறதாம். அதனால்தான் பலரும் கடல் மீன்களையே அதிகம் விரும்புகிறார்கள்.. அதிலும், சின்ன மீன்களையே அதிகம் விரும்புகிறார்களாம்.
மீன்களிலேயே, சால்மன் மீன்களில்தான், நிறைய ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமின்றி, உயர்ரக புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், நியாசின், வைட்டமின் பி12, வைட்டமின் ஏ நிறைந்துள்ளன..
அதனால்தான் இந்த மீனுக்கு விலையும் அதிகம், மவுசும் அதிகம். இந்த மீனை குழம்பு செய்தாலும், வறுத்தாலும், கிரில் செய்தாலும் ருசியாகவே இருக்கும். கர்ப்பிணி பெண்கள், சால்மன் மீனை சாப்பிட்டால், வயிற்றிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்துக்கு நன்மை என்பார்கள்.
புரதச்சத்து: அடுத்ததாக கானாங்கெளுத்தியை சொல்லலாம். வைட்டமின்கள் பி5 மற்றும் பி6, பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம் மற்றும் துத்தநாகம் மற்றும் நல்ல கொழுப்புகள் இதில் நிறைந்துள்ளன.. புரதச்சத்து அதிகமாக இருப்பதால், உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள் கிடைக்கிறது.. கார்போஹைட்ரேட் இல்லாததால், உடல் எடையை குறைக்க கானாங்கெளுத்தி மிகச்சிறந்த உணவாகும்..
அடுத்ததாக மத்தி மீனை சொல்லலாம். ஒருகாலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட, சாளை மீனுக்கு இந்த வேற ரேஞ்சுக்கு டிமாண்டு கூடிவிட்டது.. காரணம், மனித உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் தேவையான அத்தனை புரதச்சத்தும் இந்த மீனில் உள்ளதுதான்,. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடக்கூடிய மீன் இது.. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் சாப்பிடக்கூடிய மீன் இது.
சங்கரா மீன்: இதற்கு அடுத்தபடியாக நெத்திலி மீன்.. சூரை மீன், சங்கரா மீன் போன்றவைகளில் ஒமேகா 3 நிறைந்துள்ளது. ஆனால், மத்தி, சங்கரா மீனில் முள் நிறைய இருப்பதால், சிலபேர் இதை பயன்படுத்துவதில்லை. ஆனால், பெரிய மீன்களில் உள்ள ஊட்டச்சத்தை விட, இந்த மீன்களில் நிறைய உள்ளனவாம்.