சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எச்சிஎல்-லில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 10ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்யவதன் மூலம் வேலைக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.28,430 முதல் ரூ.71,110 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
மத்திய நிலக்கரி துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அதில் ஒன்று தான் எச்சிஎல் எனும் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் காப்பர் உற்பத்தியை செய்வதை பிரதானமாக பணியாக கொண்டுள்ளது. இந்நிலையில் தான் ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
காலியிடம் & சம்பளம்: ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் அசிஸ்டென்ட் போர்மேன் (Foreman)பணிக்கு 10 பேர், மைனிங் மேட் (Mining Mate) பணிக்கு 16 பேர் என மொத்தம் 26 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். அசிஸ்டென்ட் போர்மேன் பணிக்கு மாதம் ரூ.28,740 முதல் ரூ.71,110 வரை சம்பளம் வழங்கப்படும். அதேபோல் மைனிங்மேட் பணிக்கு மாதம் ரூ.28,430 முதல் ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு: பணிக்கு விண்பணப்ம் செய்வோர் அதிகபட்சமாக 35 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு என்பது 01.09.2023 என்ற தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும். ஓபிசி பிரிவினருக்கு 3 வயது வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும் வயது தளர்வு வழங்கப்படும்.
கல்வி தகுதி என்ன: அசிஸ்டென்ட் போர்மேன், மைனிங் மேட் பணிக்கு டிப்ளேமா பிரிவில் மைனிங் என்ஜினியரிங் முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். அதோடு 10ம் வகுப்பு முடித்து metalliferous Mines பிரிவில் 5 அல்லது 6 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி: தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் செப்டம்பர் மாதம் 30ம் தேதிக்குள் hindustancopper.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். அதன்பிறகு ஆன்லைன் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களின் நகல்களோடு Self Attested செய்து ‛‛DGM(Administration)-HR, Hidustan Copper Limited, Malanjkhand Copper Project, Tehsil Bisra, P.o-Malanjkhand, District-Balaghat, Madhya Pradesh - 481116'' முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு செய்வது எப்படி: பொது, ஓபிசி, இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு, டிரேட் தேர்வு, நேர்க்காணல் முறையில் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதல் 6 மாதம் என்பது Probation Period ஆகும். அதன்பிறகு உரிய பொறுப்புகளில் பணியமர்த்தப்படுவார்கள்.