திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் சுமார் 3.5 லட்சத்திற்கும் மேற்பட்ட லட்டுக்கள் ஏழுமலையான் கோவிலில் தயார் செய்யப்படுகின்றன.
லட்டு தயாரிப்பதற்கு தேவையான நெய்யை கடந்த 2019 ஆவது ஆண்டு முதல் கர்நாடக அரசின் நந்தினி பால் கூட்டுறவு விற்பனை நிறுவனம் தேவஸ்தானத்திற்கு விற்பனை செய்து வந்தது.
அதற்கு முன் 2015 ஆம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் நந்தினி நிறுவனம் தேவஸ்தானத்திற்கு நெய் விற்பனை செய்து வந்தது. அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு வரை தமிழக அரசின் ஆவின் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஆகியவை தேவஸ்தானத்திற்கு நெய் சப்ளை செய்தன.
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு முதல் மீண்டும் நந்தினி நிறுவனம் தேவஸ்தானத்திற்கு நெய் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை பெற்றது. ஆனால் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நெய் டென்டரில் நந்தினி நிறுவனம் கலந்து கொள்ளவில்லை. அந்த நிறுவனத்தை தேவஸ்தான நிர்வாகம் புறக்கணித்து விட்டதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின.
இது பற்றி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற டெண்டரில் நந்தினி நிறுவனம் கலந்து கொள்ளவில்லை. டெண்டரில் கலந்து கொள்ளாத நிறுவனம் ஒன்றுக்கு எப்படி ஒப்பந்தம் வழங்க முடியும். தேவஸ்தானத்தை பொறுத்தவரை எங்கிருந்து நெய் வாங்குகிறோம் என்பது எங்களுக்கு முக்கியமல்ல. உரிய தரத்தில் அந்த நெய் இருக்கிறதா என்று ஆய்வு செய்த பின்னரே வாங்குவோம் என்று கூறினார்.
இந்த நிலையில் இது பற்றி கூறும் லட்டு தயாரிப்பு ஊழியர்கள் நெய் வழங்கும் நிறுவனம் மாறுவதால் லட்டின் சுவை மாறும் என்று எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.
தாரமான நெய்யை எந்த நிறுவனம் குறைந்து விலைக்கு கொடுக்கின்றதோ அந்த நிறுவனத்திடம் தேவஸ்தானம் நெய் வாங்கும். டென்டரில் தேவஸ்தான நிபந்தனைகளுக்கு உட்பட்டு நெய் சப்ளை செய்யும் தகுதி படைத்த எந்த நிறுவனமும் கலந்து கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தினார்.