இந்த சீமை கருவேல மரத்தின் குணம் என்பது விவசாய விளைநிலங்களில் நிலத்தடி நீரை பூமிக்கு அடியில் சேமித்து வைக்க விடாமல் உறிஞ்சிக்கொண்டு தன்னை மட்டும் செழிப்பாக வளர்த்துக்கொண்டு பிற தாவரங்களின் வளர்ச்சி முற்றிலும் அழித்து வருவதுதான்.
இதனால் பெரும்பாலான விவசாய நிலங்களில் விவசாயம் செய்ய நிலத்தடி நீர் இல்லாமல் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்த வண்ணம் உள்ளனர் விவசாயிகள். மேலும் சீமை கருவேல மரங்கள் அதிகமாக இருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் சுவாசிக்கும் சுவாசக் காற்றை கூட மாசுபடுத்தும் தன்மை சீமை கருவேல மரங்களுக்கு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
எனவே இவ்வளவு தீமைகளை தரக்கூடிய சீமை கருவேல மரங்களை முற்றிலும் அழித்து விவசாயிகளையும் விவசாய விளைநிலங்களையும் பாதுகாக்க, அரசு சீமை கருவேல மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என திண்டுக்கல்லை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்