உள்ளே வரும் பிகே.. ஜெகன் மோகன் ஸ்டைலை கையில் எடுக்கும் எடப்பாடி.. 2025ல் அந்த முடிவாமே?

post-img
சென்னை: ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஸ்டைலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடைபயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 2009ல் அப்பாவின் மரணத்திற்கு பின் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பாதாளத்தில் இருந்தது. அதன்பின் அவர் நடத்திய யாத்திரை.. அரசியல் செயல்பாடுகள் அவரின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. கிரவுண்டு பணிகளை செய்தது.. மக்களிடம் தொடர்ந்து நெருக்கமாக இருக்கும் வகையில் முடிவுகளை எடுத்தது.. திட்டமிட்டு ஒவ்வொரு நகர்வையும் மேற்கொண்டது என்று ஜெகன் மோகன் ரெட்டியின் அரசியல் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. அவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது ஜெகன் மோகனின் பாதயாத்திரைதான். அதை செய்ய காரணம் பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம்தான். தற்போது அதே பிரஷாந்த் கிஷோருடன் எடப்பாடி கைகோர்க்க உள்ளாராம். பிரஷாந்த் கிஷோர் வருகை: அதிமுக பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளதாம். பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் பிரஷாந்த் கிஷோர் இப்போது வெளிப்படையாக பணிகளை செய்வது இல்லை. அவரின் நிறுவனம் மட்டுமே பணிகளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் நிறுவனர் இப்போதும் பிரஷாந்த் கிஷோர்தான். அவர் நேரடியாக பணிகளை செய்ய மாட்டார். ஏனென்றால் அவர் தனியாக அரசியல் கட்சி நடத்தி வருகிறார். ஆனாலும் பிரஷாந்த் கிஷோர்தான் தேர்தல் திட்டங்களை ஐபேக் நிறுவனத்திற்காக வகுத்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் அந்த நிறுவனத்துடன் எடப்பாடி பழனிசாமி ஒப்பந்தம் செய்ய முடிவு செய்துள்ளாராம். ஏற்கனவே இதற்கான ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. எடப்பாடி யாத்திரை: சமீபத்தில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் 234 தொகுதிகளிலும் ஜனவரி இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம். அஇஅதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும்; உறுதியாக, அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும், என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல், லோக்சபா தேர்தல் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசனைகள் செய்யப்பட்டன ஒன்றரை ஆண்டுகளில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் பொதுக்குழு கூடியுள்ளது. அதிமுகவில் பிரிந்த தலைவர்கள் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்று டாப் தலைவர்கள் பலர் நினைக்கிறார்களாம். அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், சி.வி.சண்முகம், தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட முக்கிய பெரிய தலைகள் எல்லாம் இந்த கோரிக்கையை வைக்க தொடங்கி உள்ளனராம். அதிமுகவில் இது புதிய பூகம்பத்தை கிளப்பி உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இன்று நடக்கும் கூட்டம் அதிகம் கவனம் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் சுற்றுப்பயணம் போனால்.. கட்சி மீண்டும் வளரும்.. மக்களிடம் நாம் சென்று சேரலாம் என்று எடப்பாடி நினைக்கிறாராம். இதை மனதில் வைத்தே 234 தொகுதிகளிலும் ஜனவரி இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம். அஇஅதிமுக தலைமையில் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும்; உறுதியாக, அத்தனை பேரும் எதிர்பார்க்கின்ற கூட்டணி அமையும், என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாராம்.

Related Post