ஒட்டுத் துணி கூட இல்லாமல்.. லேடிஸ் கம்பார்ட்மெண்டில் ஆண் செய்த ‘மெண்டல்’ வேலை! அலறிய பெண்கள்! வீடியோ

post-img
மும்பை: மும்பையில் மின்சார ரயில் குறிப்பாக பெண்கள் பயணிக்கும் லேடிஸ் கம்பார்ட்மெண்டில் திடீரென நிர்வாண நபர் ஒருவர் புகுந்ததும், இதனால் அங்கிருந்த பெண்கள் அலறிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய போக்குவரத்து துறையின் முதுகெலும்பு என்று ரயில்வே துறையை சொல்லலாம். அந்த அளவுக்கு போக்குவரத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது ரயில்வே. நீண்ட தூர பயணங்களுக்கு மட்டுமல்லாமல் நகரங்களுக்குள்ளேயே ரயில் சேவை மிக முக்கியமானது. குறிப்பாக சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் மின்சார ரயில் சேவை பொதுமக்களுக்கு வரப்பிரசாதமாக திகழ்கிறது. மிகக் குறைந்த விலையில் அதே நேரத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பான விரைவான போக்குவரத்து சேவை வழங்குவதில் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்கள் முக்கிய பங்காற்றுகின்றன. ஆனாலும், உள்ளூர் ரயில் பயணங்களில் சில நேரங்களில் சிக்கல்களும் இருக்கிறது. குறிப்பாக சமூக வலைதளங்களின் ஆதிக்கம் பெருகிவிட்ட இந்த காலத்தில் லைக்ஸ்கள் பெறுவதற்காக ரயிலில் சாகசம் செய்வது, நடனம் ஆடுவது என பலர் அத்துமீறி வருகின்றனர். மேலும் இளம் ஜோடிகள் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வதும் ரயில் பயணிகளை அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் மும்பை ரயில்களில் நடனம் ஆடுவது, அரைகுறை ஆடைகளுடன் பயணம் செய்வது என பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. இதையடுத்து தனிமனித ஒழுக்கம் அவசியம், ரயில் பயணத்தின் போது கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என ரயில்வே துறை எச்சரித்தது. இந்த நிலையில் மும்பையில் மின்சார ரயில் குறிப்பாக பெண்கள் பயணிக்கும் லேடிஸ் கம்பார்ட்மெண்டில் திடீரென நிர்வாண நபர் ஒருவர் புகுந்ததும், இதனால் அங்கிருந்த பெண்கள் அலறிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சிஎஸ்எம்டி - கல்யாண் ஏசி விரைவு ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. உள்ளூர் ரயில் சேவையான இதில் பெண்களுக்கு என தனி பெட்டிகளும் உண்டு.இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அந்த ரயிலில் பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் ஆண் ஒருவர் நிர்வாண நிலையில் திடீரென உள்ளே புகுந்தார். மாலை 4 மணிக்கு காட்கோபர் ரயில் நிலையத்தில் ரயில் நின்ற போதுதான் பெண்கள் கோச்சின் கதவு அருகே நின்று இருந்த அந்த நபர் திடீரென உள்ளே ஏறினார். இதை அடுத்து பெண்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த பக்கத்து பெட்டியில் இருந்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர் அந்த நபரை வெளியேற்றினார். இதனை ரயிலில் பயணம் செய்த சிலர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திவரும் ரயில்வே போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர். ஏற்கனவே பெருநகரங்களில் இரவு நேரங்களில் ரயில்களில் பயணம் செய்தும் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என புகார் கூறப்படும் நிலையில் ரயில் பெட்டிகளில் கூடுதல் பாதுகாப்புக்காக பெண் போலீசாரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் பட்ட பகலில் பெண்கள் பெட்டியில் உடைகள் இல்லாமல் ஆண் ஒருவர் ஏறிய சம்பவமும் அதன் வீடியோ காட்சிகளும் வெளியாகி இருக்கும் நிலையில், அந்த நபர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.

Related Post