சென்னை பரங்கிமலையில் பிரபல கல்லூரி அருகே பொக்லைனுடன் போன அதிகாரிகள்.. ரூ.50 கோடி நிலம் மீட்பு

post-img
சென்னை: சென்னை பரங்கிமலையில் அரசு நிலத்தை தனி நபர் குத்தகை எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார். அந்த நிலததை குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் ஆக்கிரமிப்பு செய்து, தனியார் கல்லூரி செயல்பட்டு வந்தது தெரியவந்தது. அங்கு கடந்த ஜூலை மாதம் 3 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டது. இந்நிலையில் மீட்கப்பட்ட அரசு நிலத்தில் சுமார் 1 ஏக்கர் நிலத்தை வாகனங்களை நிறுத்துமிடமாக பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், அதனை அரசு பொக்லைன் வைத்து இடித்து அகற்றி மீட்டனர். அதன் மதிப்பு 50 கோடியாகும். சென்னை பரங்கிமலை ஜி எஸ் டி சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் தனியாருக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. குத்தகை காலம் முடிந்தும் அந்த இடத்தை அவர்கள் காலி செய்யவில்லை.. அந்தஇடத்தில் தனியார் கல்லூரி மற்றும் பள்ளி, கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் பல்லாவரம் தாசில்தார் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் வணிக வளாக நிலத்தை அதிரடியாக கையகப்படுத்தினார்கள். இதனிடையே அரசு நிலத்தை கையகப்படுத்த அதிகாரிகள் முயன்றபோது, உடனடியாக அந்த கல்லூரி நிர்வாகம் நீதிமன்றம் சென்றதால் தற்காலிகமாக பள்ளி மற்றும் கல்லூரி நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் கல்லூரி நிர்வாகத்தினர் நீதிமன்ற உத்தரவை மீறி அரசு கையகப்படுத்திய இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டியிருந்தனர். இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய் துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன் வந்து அரசு இடத்தில் இருந்த இனிப்பு கடை மற்றும் கல்லூரி சார்பில் விரிவுப்படுத்தி புதிதாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தை அதிரடியாக இடித்து தள்ளினர்.பின்ர் அந்த இடத்துக்கு கடந்த ஜூலை மாதம் 'சீல்' வைத்தனர். இதேபோல் சென்னையை அடுத்த பரங்கிமலை பட்ரோடு-பூந்தமல்லி சாலையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியார் நபர்கள் சிலர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். இந்த நிலையில், குத்தகை காலம் முடிந்த பின்னரும் அரசு நிலத்தை அரசுக்கு ஒப்படைக்காமல் வணிக நோக்கில் அவர்கள் பயன்படுத்தி வந்ததாக கூறப்பட்டது இதையடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தை மீட்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் கடந்த ஜூலை மாதம் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையிலான வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அங்கிருந்த சுற்றுச்சுவர் மற்றும் கட்டிட ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி ரூ.200 கோடி மதிப்புடைய 1 ஏக்கர் நிலத்தை மீட்டார்கள். பரங்கிமலை பட்ரோட்டில் இதுவரை குத்தகை காலம் முடிந்தும் ஒப்படைக்காமல் இருந்த சுமார் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது. இந்த பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் மீட்கப்ட்ட 3 ஏக்கர் அரசு நிலம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மற்றும் குத்தகைதாரர் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த இடத்தில் கல்லூரி மட்டும் நடத்தி கொள்ள கோர்ட்டில் தற்காலிக உத்தரவு வழங்கப்பட்டது. இந்தநிலையில் மீட்கப்பட்ட அரசு நிலத்தில் சுமார் 1 ஏக்கர் நிலத்தை வாகனங்களை நிறுத்துமிடமாக பயன்படுத்தியதை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து செங்கல்பட்டு கலெக்டர் உத்தரவின்பேரில் பல்லாவரம் தாசில்தார் ஆறுமுகம் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வாகன நிறுத்துமிடத்துக்காக கட்டி இருந்த தடுப்பு கம்பிகள், கேட் ஆகியவற்றை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட அரசு நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடியாகும்.

Related Post