மும்பை: மகாராஷ்டிராவில் மூன்றாவது முறையாக தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகியிருக்கிறார். மாடர்ன் அபிமன்யூ என தன்னை ஒருமுறை சொல்லிக்கொண்ட தேவேந்திர பட்னாவிஸ் சக்கர வியூகத்தை உடைத்து எப்படி மீண்டும் முதல்வர் அரியணையை பிடித்தார் என்பது பற்றிய இங்கே விவரங்களையும் அவர் அரசியலில் கடந்து வந்த பாதையையும் பார்க்கலாம்.
மகராஷ்டிர முதல்வராக 54 வயதான தேவேந்திர பட்னாவிஸ் இன்று 3-வது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். முதல்வராக இருந்தவர் பின்னர் துணை முதல்வராக இருந்தார். அதன்பிறகு தற்போது மீண்டும் முதல்வர் பதவி அவரை தேடி வந்ததுள்ளது. மகாராஷ்டிரா அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸ் சாதித்தது எப்படி? என்பது பற்றி இங்கே பார்போம்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் 1970 ஜூலை 22-ல் தேவேந்திர தேவேந்திர பட்னாவிஸ் பிறந்தார். இவரது தந்தை கங்காதர் பட்னாவிஸ், சட்ட மேலவை உறுப்பினர், ஜனசங்கத்துடன் தொடர்புடையவர். தாயார் பெயர் சரிதா பட்னாவிஸ். பிராமண குடும்பத்தை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் இந்திரா கான்வெண்ட் பள்ளியில் படித்தார். சட்ட படிப்பில் கோல்டு மெடல் பெற்றுள்ளார். எம்பிஏவும் முடித்துள்ளார்.
1992-ம் ஆண்டு நாக்பூர் நகராட்சி உறுப்பினராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அதுதான் அவரது அரசியல் எண்ட்ரி என்று சொல்லலாம். இரண்டு முறை அவர் அந்தப் பதவியில் இருந்தார். தனது 27 வயதில் நாக்பூரின் மிகவும் இளம் வயது மேயராக பட்னாவிஸ் தேர்வானார். படிப்படியாக அரசியலில் வளர்ந்த பட்னாவிஸ் மகாராஷ்டிரா பாஜகவின் தவிர்க்க முடியாத முகமாக மாறினார். கடந்த 2014-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்ற பட்னாவிஸ் 2019 ஆம் ஆண்டு ஆட்சி செய்தார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா இணைந்து போட்டியிட்டது. முதல்வர் விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாததால் சிவசேனா - பாஜக கூட்டணி உடைந்தது. உத்தவ் தாக்கரே காங்கிரஸ், என்.சிபியுடன் இணைந்து ஆட்சி அமைத்தார். இதனால் எதிர்க்கட்சி வரிசையில் பட்னாவிஸ் அமர்ந்தார்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் இந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி நீடிக்கவில்லை. உத்தவ் தாக்கரே 2 ஆண்டுகள் மற்றும் 214 நாட்கள் முதல்வராக இருந்தார். பின்னர் சிவசேனா, என்சிபி கட்சி உடைந்தது. இதனால், அந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கவிழ்த்தார். அதையடுத்து சிவசேனா, பாஜக, என்சிபி(அஜித் பவார்) கூட்டணி ஆட்சி அமைந்தது. பாஜகவுக்கு அதிக எம்எல்ஏக்கள் இருந்தது.
எனினும் பாஜக தலைமை ஏக்நாத் ஷிண்டே முதல்வராக ஒகே சொன்னது. இதை பட்னாவிஸ் எந்த எதிப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக்கோண்டார். அதிக எம்எல்ஏக்கள், முன்னாள் முதல்வர் என்பதையெல்லாம் நினைக்காமல் ஈகோ பார்க்காமல் 2-வது இடத்தில் உட்கார ரெடியானார்.
கட்சியின் உணமையான தொண்டர் நான் எந்த தியாகத்திற்கும் தயார் என்பதை காட்டுவது போல பட்னாவிசின் முடிவு இருந்தது. அதன் பிறகு கடந்த ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் மகாயுதி கூட்டணி படு தோல்வியை சந்தித்தது. ஆனால் அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நிலைமை தலை கீழாக மாறியுள்ளது.
பாஜக 148 தொகுதிகளில் போட்டியிட்டு 132 தொகுதிகளில் வென்றது. மகாயுதி கூட்டணி 288 தொகுதிகளில் போட்டியிட்டு 230ல் வென்றது. பல கட்சிகள் கூட்டணியில் அங்கம் வகிப்பதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி கேட்டு அடம் பிடித்தார். அஜித் பவார் கூட துணை முதல்வர் பதவிக்கு உடனடியாக ஒகே சொன்னார்.
ஆனால், ஷிண்டே முரண்டு பிடித்தார். தனது தலைமையின் கீழ் தேர்தலை எதிர்கொண்டோம் என்பது ஷிண்டேவின் வாதமாக இருந்தது. ஆனால் பாஜக எம்.எல்.ஏக்கள் மொத்தமாக பட்னாவிஸ்க்கு ஆதரவாக இருந்தார். இதனால் கடைசியில் அவருக்கே முதல்வர் அரியணை தேடி வந்துள்ளது.
முன்பு ஒருமுறை தேவேந்திர பட்னாவிஸ் கூறியிருந்தார். நான் ஒரு மாடர்ன் அபிமன்யூ, சக்ரவியூகத்தை எப்படி உடைக்க வேண்டும் என எனக்கு தெரியும் என்று சொல்லியிருந்தார். பட்னாவிஸின் சக்ரக வியூகம் என்னவென்றால் பொறுமை, விசுவாசம், தியாகம் இவைதான். இந்த அனைத்தையும் செய்து காட்டிய பட்னாவிஸ், வலுவாக மீண்டும் வந்து இருக்கிறார்.
Weather Data Source: Wettervorhersage 21 tage