வரி மட்டும் இவ்வளவு கட்டணுமா.. ஆ! செஸ் சாம்பியன் பரிசுத்தொகையில்.. குகேஷ் எவ்வளவு வரி கட்ட வேண்டும்?

post-img
சென்னை: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் வென்ற குகேஷுக்கு 11.45 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. அதோடு இதே தொடரில் அவர் வென்ற மற்ற பரிசு தொகைகள் காரணமாக இவர் கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய் வென்றுள்ளார். ஆனால் இவருக்கு வரி மட்டும் மிக அதிக அளவில் விதிக்கப்படும். சிங்கப்பூரில் நடந்து வந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் குகேஷ் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு அரசின் அறிவுரை, நிதி உதவி உள்ளிட்ட தொடர் ஆதரவுகள் காரணமாக புதிய சரித்திரம் படைத்தார். கடைசி போட்டி டிராவில் முடியும் என்றே பலரும் எதிர்பார்த்த போதிலும், குகேஷ் வெற்றி பெற்றார். குகேஷ் இந்த தொடரில் முதலில் ஆடவே தகுதி பெறவில்லை. ஆனால் இவர் தகுதி புள்ளிகளை பெற தமிழ்நாடு அரசு சிறப்பாக தொடர் போட்டிகளை நடத்தியது. இந்த தொடர் போட்டிகளுக்கு என்று கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ரூபாய் தமிழ்நாடு விளையாட்டு துறை மூலம் செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு நடத்திய இந்த சிறப்பு தொடர் காரணமாக குகேஷ் தகுதி புள்ளிகளை பெற்றார். இதையடுத்து உலக சாம்பியன் போட்டிகளுக்கு அவர் தகுதி பெற்றார். சிங்கப்பூரில் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இதில் இந்தியா சார்பில் தமிழக வீரர் டி குகேஷ், சீனாவின் டிங் லிரன் ஆகியோர் களமிறங்கினர். எப்படி வென்றார்?: இந்த தொடர் மிக விறுவிறுப்பாக நடந்தது. 1. உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 14 சுற்றுகளில் போட்டி நடந்தது. அதில் எந்த வீரர் முதலில் 7.5 புள்ளிகளைப் பெறுகிறார்களோ அவரே வெற்றியாளர். 2. முதல் 13 சுற்றுகளில் கடும் போட்டி நிலவியது. இதில் முதல் 13 போட்டிகளின் முடிவில் டிரா என்ற நிலை இருந்தது. கடைசி போட்டி வெற்றியாளரை தேர்வு செய்யும் போட்டியாக இருந்தது. 3. அதாவது குகேஷ் மற்றும் டிங் லிரன் இருவரும் தலா 2 புள்ளிகளை வென்று இருந்தனர். மொத்தமாக இருவரும் தலா 6.5 புள்ளிகளைப் பெற்று இருந்தனர். 4. கடைசி சுற்றில் குகேஷ் சிறப்பாக ஆடி.. வெற்றிபெற்றார். பரிசு தொகை: இந்த தொடரில் இந்த வெற்றிக்குப் பின், குகேஷுக்கு 11.45 கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. அதோடு இதே தொடரில் அவர் வென்ற மற்ற பரிசு தொகைகள் காரணமாக இவர் கிட்டத்தட்ட 17 கோடி ரூபாய் வென்றுள்ளார். ஆனால் இவருக்கு மொத்தமாக இந்த தொகை கிடைக்காது. இவர் செஸ் வரி, அடிப்படை வரி, சர்ஜ் வரி ஆகிய 3 வரிகள் விதிக்கப்பட்டு. கிட்டத்தட்ட 40 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படும். அதன்படி மொத்தமாக 6 கோடி ரூபாய்க்கு வரி விதிக்கப்படும். அதாவது 17 கோடி ரூபாய்க்கு 6 கோடி ரூபாய்க்கு மேல் வரி மட்டும் விதிக்கப்படும். இதில் மெயின் தொடரில் மட்டும் வென்ற 11.45 கோடி ரூபாயை கணக்கில் கொண்டால்.. இவருக்கு நான்கரை கோடி ரூபாய் வரி விதிக்கப்படும். இதனால் அவர் கிட்டத்தட்ட ஆறரை கோடி ரூபாய் மட்டுமே எடுத்து செல்ல வாய்ப்புள்ளது. நெட்டிசன்கள் இதை வைத்து கடுமையாக கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

Related Post