வாயை திறந்தால் சமந்தாவின் மானமே போயிடும் - எச்சரிக்கை கொடுத்த தயாரிப்பாளர்

post-img

நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா அவரை திடீரென்று பிரிந்தார். அதன் பிறகு புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி தனக்கென்று ரசிகர்களை அதிகப்படுத்திக்கொண்டார். மேலும் ஹாலிவுட் படத்தில் நடிக்கவும் அவர் கமிட்டானார். இதன் காரணமாக சமந்தா மிகப்பெரிய ரவுண்டு வரப்போகிறார் என அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட நம்பிக்கையில் இருந்தனர்.

 
 
 
Producer Chitti Babu Talks About Actress Samantha

மையோசிடிஸ் நோய்: இந்தச் சூழலில் சமந்தாவுக்கு மையோசிடிஸ் எனும் நோய் வந்தது. அரிய வகை நோய் என்பதால் அவர் பல மாதங்கள் சிகிச்சையில் இருந்தார். ஒருவழியாக சிகிச்சையை முடித்துக்கொண்டு நல்லபடியாக மீண்டு வந்தார். நோயிலிருந்து மீண்டு வந்த அவர் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அந்தவகையில் அவர் நடித்த சாகுந்தலம் படம் சமீபத்தில் வெளியானது. குஷி படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

சறுக்கிய சாகுந்தலம்: கடந்த வாரம் ரிலீஸான சாகுந்தலம் படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இதுவரை அந்தப் படம் 10 கோடி ரூபாய்கூட வசூல் செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் கிராஃபிக்ஸ் காட்சிகள் எல்லாம் கார்ட்டூன் காட்சிகளை பார்ப்பது போல் இருப்பதாகவும், கதையே ரொம்ப வீக்காக இருப்பதாகவும் ரசிகர்கள் வெளிப்படையாக கூறினர்.

 

புரோமோஷனில் சமந்தா: இதற்கிடையே சாகுந்தலம் படத்தின் புரோமோஷன்போது சமந்தா கொஞ்சம் எமோஷனலாகவே காணப்பட்டார். மேலும் சில மேடைகளில் கண்ணீர் விட்டு அழவும் செய்தார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவுக்கு தங்களது ஆதரவையும், ஆறுதலையும் தெரிவித்தனர். அதேசமயம் சமந்தா மேடைக்கு மேடை இப்படி அழுவதை நிறுத்த வேண்டும் என ஒரு சிலர் பேச தொடங்கினர்.

விமர்சித்த தயாரிப்பாளர்: அந்தவகையில் தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டிபாபு சமீபத்தில் அளித்த பேட்டியில், சாகுந்தலம் படத்தின் தோல்வியால் சமந்தாவின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டது. அவர் தனக்கு நோய் உள்ளதாகக் கூறியது எல்லாம் நடிப்புதான். இப்படி அனுதாபத்துடன் பேசி தன்னுடைய படங்களுக்கு விளம்பரம் தேடிக்கொள்கிறார். கதாநாயகி என்ற தகுதியை சமந்தா இழந்துவிட்டார்" என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

 
Producer Chitti Babu Talks About Actress Samantha

சமந்தாவின் பதிலடி: இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை சமந்தா, காதில் முடி அதிகம் வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கூகுளில் தேடி அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார். சிட்டி பாபுவுக்கு இரண்டு காதுகளில் அதிகம் முடி வளர்ந்திருப்பதால் அதை குறிக்கும் விதமாக சமந்தா அவ்வாறு செய்திருந்தார்.

மானம் போயிடும்: இந்நிலையில் நான் வாயை திறந்தால் சமந்தாவின் மானமே போயிடும் என சிட்டிபாபு காட்டமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என் காதுகளில் இருக்கும் முடியை பற்றி பேசாமல் என் வார்த்தையில் இருக்கும் நேர்மையை பற்றி பேசினால் நன்றாக இருக்கும். நான் மட்டும் வாயை திறந்தால் சமந்தாவின் மானமே போய்விடும்" என்றார். அவரது இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்தப் பேச்சுக்கு சமந்தா பதிலடி கொடுப்பாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

Related Post