100 நாள் வேலைத்திட்டத்திற்காக.. தாயார் மனு அளித்ததற்கு காரணம் இதுதான்.. சீமான் சொன்ன விளக்கம்

post-img
சென்னை: மத்திய அரசின் 100 நாள் திட்டத்தை சீமான் விமர்சிக்கும் நிலையில், அவரது தாய் அன்னம்மாள் 100 நாள் திட்டத்தை செயல்படுத்த கோரி சிவகங்கை அரணையூர் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு மனு அளித்தார். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்தப்போது சீமானிடம் பத்திரியகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் அளித்த பதிலை இங்கு பார்க்கலாம். நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் ஆகும். சிவகங்கை இளையான்குடி அருகே அரணையூர் கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது தந்தை இறந்துவிட்டார். தாய் அன்னம்மாள் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில், மத்திய அரசின் நூறு நாள் வேலைத் திட்டம் முறையாக வழங்கப்படவில்லை என்று கிராம மக்களுடன் போராட்டம் செய்தார். சீமான் மத்திய அரசின் நூறு நாள் திட்டத்தை விமர்சித்து வரும் நிலையில், அவரது தாய் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டது பேசுபொருளானது. அரணையூர் கிராமத்தை சேர்ந்த மக்கள் ஒன்று திரண்டு நேற்று நூறு நாள் வேலைத்திட்டத்தை முறையாக செயல்படுத்த கோரி போராட்டம் செய்தனர். மேலும் ஊர்வலமாக சென்று இளையான்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர். மத்திய அரசின் 100 நாள் திட்டத்தை சீமான் விமர்சிக்கும் நிலையில், அவரது தாய் அன்னம்மாள் 100 நாள் திட்டத்தை செயல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் பத்திரியகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து சீமான் கூறியதாவது:- ”100 நாள் வேலை திட்டத்தால் எங்கள் வீட்டுக்கே வேலைக்கு ஆட்கள் வருவதில்லை. அம்மா மட்டுமே ஒத்த ஆளா இருந்து வேலையை செய்றாங்க. எங்க அம்மா இதற்கு ஏன் போயிருப்பாங்க என்றால், இந்த போராட்டத்தில் சீமான் அம்மாவை கொண்டு போய் நிறுத்தினால் தான் அப்படின்னு அழைச்சுட்டு போயிருப்பாங்க. எங்க ஊரில் இருப்பவர்கள் அழைத்ததால் எங்க அம்மா போயிருப்பாங்க.. உண்மையிலேயே நூறு நாள் வேலை திட்டத்தில் பாதிக்கப்பட்ட வேளாண் குடும்பங்களில் என்னுடைய குடும்பமும் ஒன்று. உலகத்துக்கே தெரியும். ஒரு நாளைக்கு 2 ஏக்கர் அறுவடை செய்த நாங்க, இப்போது ஒரு ஏக்கருக்கு ஒரு வாரம் ஆகின்றது. தக்காளி பறிக்கவோ, மிளகாய் எடுக்கவோ, கத்தரிக்காய் பறிக்கவோ எங்களுக்கு ஆட்கள் இல்லை. வேளாண்மையை விட்டு வெளியேறுகிறார்கள். இந்த நிலத்தை எல்லாம் யாருக்காவது கொடுத்திடுப்பா என்று எங்க அம்மாவே கெஞ்சுகிறார்கள். போட்டு சாப்பிட்டுகிடட்டும். காடு காடா இருந்தா போதும்..” இவ்வாறு அவர் கூறினார். மேலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு சீமான் கண்டனம் தெரிவித்தார். சீமான் கூறுகையில், “சட்டம் ஒழுங்கை சீர்படுத்த எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதற்கு இந்த சென்னை அண்ணாமலை பல்கலைச் சம்பவம் உதாரணம். சட்டம் ஒழுங்கை இவ்வளவு கேவளமாக வைத்துக்கொண்டு வரும் 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று சொல்வதற்கு உங்க நா நடுங்கவில்லையா முதல்வர் அவர்களே?.. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அடுத்த தேர்தலுக்கு வெற்றிக் கணக்கை போடும் திட்டத்தில், அணு அளவாவது சட்டம் ஒழுங்கை பாதுகாக்க போட்டிருந்தாலோ, சிந்தித்து இருந்தாலோ அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு இப்படிஒரு கொடுமை நடந்திருக்குமா? பாலியல் வன்கொடுமை செய்த குற்ற்வாளியை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கும் படியும், இனி இதுபோன்ற எண்ணமே வராத அளவுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு சீமான் பேசினார். Note: The content shared here is sourced from publicly available internet platforms, and we do not claim ownership. We are not responsible for any inaccurate or fake information.

Related Post