மன்னிப்புக் கடிதம் தந்தால் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம்... இபிஎஸ் அறிவிப்பு...

post-img

ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளான அதிமுக-வினர் மன்னிப்புக் கடிதம் தந்தால் மட்டுமே கட்சியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், கட்சியின் கொள்கை, குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்படுவோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவது வழக்கம் என்றும் அத்தகையவர்கள் தாங்கள் செய்த தவறை உணர்ந்து, மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால் கட்சி பொதுச் செயலாளருக்கு மன்னிப்புக் கடிதம் தந்து, கட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்படுபவர்கள் மட்டுமே மீண்டும் உறுப்பினராக முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பொதுச் செயலாளரை நேரில் சந்தித்து மன்னிப்புக் கடிதம் தந்து கட்சியில் சேருபவர்களுமே அதிமுக உறுப்பினராக கருதப்படுவர் என்றும் தெரிவித்துள்ளார்.

மறைந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலந்தொட்டே இந்த நடைமுறை பின்பற்றப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, எனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டுமே சேருவதாக இருந்தால் மேற்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Related Post