கோவை, திருச்சி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் 177 கோடி ரூபாய் மதிப்பில் 34 உயர் மட்ட பாலங்கள் கட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
2024 - 2025 ஆண்டில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகள், இணைப்பு வசதி இல்லாத குடியிருப்பு பகுதிகளை முன்னிலைப்படுத்தி மொத்தம் 18 மாவட்டங்களில் 34 பாலங்கள் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் பி.என். பாளையம், துலுக்கானூர் உள்ளிட்ட ஆறு இடங்களில் பாலம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் உத்தங்கரை, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட நான்கு இடங்களில் பாலம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தவிர மதுரை, கடலூர், தருமபுரி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் புதிதாக உயர் மட்ட பாலங்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம் 18 மாவட்டங்களில் 177 கோடியே 84 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் 34 பாலங்களை அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.