மாமல்லபுரம் கடலில் சீறிபாய்ந்து பதக்கங்களை தட்டி தூக்கிய ஜப்பான் நாட்டு வீரர்கள்..

post-img

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கடற்கரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு அலைசறுக்கு சங்கம் சார்பில் சர்வதேச அலைசறுக்கு போட்டிகள் நடைபெற்றது.

இந்த அலைசறுக்கு போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மாலத்தீவு, இலங்கை, இந்தோனேசியா, தாய்லாந்து உள்பட 10 நாடுகளை சேர்ந்த சர்வதேச வீரர்கள், வீராங்கனைகள் என மொத்தம் 74 பேர் பங்கேற்று விளையாடினர்.

இறுதிச்சுற்றில் பெண்கள் பிரிவில் ஜப்பான் நாட்டை சேர்ந்த சாரா வகிதா என்பவர் வெற்றிபெற்றார். இவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஷீனோ மட்சுடாவுடன் விளையாடினார். ஆண்கள் பிரிவில் ஜப்பான் நாட்டை சேர்ந்த டென்ஷி இவாமி என்பவர் வெற்றி பெற்றார்.

இவர் ஸ்வீடன் நாட்டு வீரர் கையின் மார்டின் உடன் விளையாடி அவரை வெற்றி கண்டார். வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழக அரசு சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு செயலாளர் மேகநாத ரெட்டி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

Related Post