வேலைக்கார பெண் முன்பே.. பெங்களூர் தொழில் அதிபர் அடிக்கடி செய்த காரியம்.. வீட்டில் நடந்த ட்விஸ்ட்

post-img
பெங்களூர்: பெங்களூர் தொழில் அதிபர் வீட்டில் திருடிய குற்றச்சாட்டில் வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார்.11.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. வேலைக்கார பெண் முன்பே குறிப்பிட்ட தொழில் அதிபர் பீரோ சாவியை வைப்பதும், பின்னர் அதில் இருந்து பணம், நகை எடுப்தையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அதை பார்த்து அந்த பெண் கைவரிசை காட்டியதாக கூறப்படுகிறது. பெரிய தொழில் அதிபர்களின் வீடுகளில் பணிபுரியும் வேலைக்கார பெண்கள் சிலர் நகைகளை திருடியதாக, பணத்தை திருடியதாக புகார்களில் சிக்கி கைதாகி உள்ளார்கள். நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் தங்க நகைகளை திருடியதாக வேலைக்கார பெண் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இதேபோல் "நாடோடிகள் 2", "காதல் கண்கட்டுதே" உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த நடிகை அதுல்யா வீட்டில் வேலைக்கார பெண் நகை மற்றும் பணம் திருடி கடந்த ஜூலை மாதம் கைதானார். இதேபோல் பிரபல நடிகர் கருணாகரன் வீட்டில், 60 சவரன் நகை திருடு போனதாக அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் கடந்த அக்டோபர் மாதம் வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார். இதேபோல் பல இடங்களில் வேலைக்கார பெண்கள் திருடியதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் பெங்களூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பெங்களூர் புவனேஷ்வரி நகர், முதலாவது மெயின் ரோட்டில் உள்ள தொழில்அதிபர் வீட்டில் வேலைக்கார பெண் ஒருவர் வேலை பார்த்து வந்தார். வீட்டில் வசிப்போரின் நன்மதிப்பை பெறும் விதமாக அந்த பெண் வேலையும் செய்திருக்கிறார் இதனால் அந்த பெண் கண்முன்னே பீரோவில் நகைகளை வைப்பது, பின்னர் தேவைக்காக எடுப்பதை தொழில்அதிபர் வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனை கவனித்த பெண் நைசாக ஒருநாள் சாவியை எடுத்து பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடி விட்டு தலைமறைவாகிவிட்டார். இதுபற்றி தொழில் அதிபர் சார்பில் பெங்களூர் பையப்பனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட வேலைக்கார பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த போலீசார், தலைமறைவாக இருந்த பெண்ணை கைது செய்திருந்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் தொழில்அதிபரின் வீட்டில் திருடிய 157 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.11.50 லட்சம் ஆகும். விசாரணைக்கு பின் அந்த பெண்ணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Post