புத்தாண்டு பலன் 2025: புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ளன. 2025 புத்தாண்டில் ராகு சுக்கிரன் சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
ஒவ்வொருவருடைய ராசியிலும் கிரக நிலைகள் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எந்தவொரு விஷயமானாலும் முதலில் ஒருவரின் ஜாதகத்தில் பார்ப்பது ராசியில் ராகு மற்றும் சுக்கிரனின் நிலை குறித்து தான். அந்த அளவுக்கு, ராகுவுக்கும், சுக்கிரனும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கிரகங்களாகும்.
உலகத்தில் உள்ள அனைத்து இன்பங்களுக்கும் அதிபதியாக திகழ்பவர் சுக்கிரன். ராசியில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால்தான் செல்வம் பெருகும். ராகு நல்ல நிலையில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்கள் பெயர்ச்சியாக உள்ளன. கிரக பெயர்ச்சி பலன்கள் கணிப்பின் அடிப்படையில், ராகு சுக்கிரன் சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் யோகம் பெறப் போகின்றனர்.
2025 புத்தாண்டில் பல்வேறு மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பீர்கள். அந்த வகையில், ராகு சுக்கிரனின் சேர்க்கையால் எந்தெந்த ராசிக்காரர்கள் சுப பலன்களை அனுபவிக்கப் போகின்றனர், அதிர்ஷ்டத்தைப் பெறப் போகின்றனர் என்று விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் (New year rasi palan for kadagam): ராகு மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் புத்தாண்டில் கடக ராசியினர் அனைத்து விதமான செல்வ செழிப்பையும், ஆடம்பர வாழ்க்கையையும் பெறப் போகின்றனர். வியாபாரம், தொழில் ரீதியான விஷயங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உயர் பதவிகளில் பொறுப்பேற்பதற்கான அனுகூலம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான விஷயங்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை பொங்கும். பொருளாதாரம் மேம்படும். பண வரவு உண்டாகும். நிதி நிலை மேம்படும்.
துலாம் (New year rasi palan for Thulam): துலாம் ராசியினருக்கு சுக்கிரன் ராகு சேர்க்கையால் சிறப்பான ஆண்டாக அமையப் போகிறது. வேலை செய்யும் இடத்தில் சிறப்பான பலன்கள், அதிர்ஷ்டம் உண்டாகும். வாய்ப்புகள் தேடி வரும். அனைத்து கடன் பிரச்னைகளில் இருந்தும் விலகுவீர்கள். இரு கிரகங்களின் இணைப்பால் நல்ல முன்னேற்றமும், அதிர்ஷ்மும் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். தன்னம்பிக்கை, தைரியம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுக்கிரனின் ஆசிர்வாதத்தால் சொத்துகளை வாங்கி மகிழ்வீர்கள்.
மீனம் (New year rasi palan for Meenam): மீனம் ராசிக்காரர்களுக்கு ராசியினருக்கு சுக்கிரன் ராகு இணைப்பால் எதிர்பாராத பண வரவு உண்டாகும். அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று ராஜவாழ்க்கை வாழும் யோகம் உண்டாகும். இதுவரை இருந்து வந்த அனைத்து விதமான கடன் பிரச்னைகளும் உங்களைவிட்டு நீங்கும். வருமானம் அதிகரிக்கும். பணம் கையில் தங்கும், பொருளாதாரம் மேம்படும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்து வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பும் ஆதரவும் பெருகும்.